பாலக்கீரை சூப்
சுவையான ஆரோக்கியமான பாலக்கீரை சூப் செய்முறை, கதாசிரியர் வள்ளி.தி அவர்கள் எழுதிய சமையல் குறிப்பை வாசித்து பின்னூட்டம் பதிவு செய்யவும் – palak soup tamil
தேவையானவை
1) பாலக் கீரை ரெண்டு கைப்பிடி அளவு
2) சின்னவெங்காயம் 2-3
3) பூண்டு 2-3 பல்
4) பட்டை ஒரு துண்டு
5) சிறு தக்காளி-1
6) பால் அரை டம்ளர்
7) கான்பிளவர் 1/2 ஸ்பூன்
8) மிளகு தூள்
செய்முறை
சின்ன வெங்காயத்தையும், பூண்டையும், தக்காளியையும் இலேசாக கால் ஸ்பூன் நெய்யில் வதக்கிக் கொண்டு வேகவிடவும் .5 நிமிடம் கழித்து அத்துடன் கழுவிய பாலக்கீரையை சேர்த்து வேகவிடவும் (கீரை அதிகம் நேரம் வேகவைத்தால் நிறம் மாறிவிடும்) வெந்ததும் இறக்கி ஆற விடவும் ஆறியதும்அரவை இயந்தரத்தில்( மிக்ஸியில்) நன்றாக அரைக்கவும் – palak soup tamil.
பின் வாணலியில் அரை ஸ்பூன் வெண்ணெய்யை போட்டு, அது இளகியதும் ஒரு துண்டு பட்டையை தாளித்துக் கொண்டு, அரைத்த கலவையை உப்பு போட்டு கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும், இறக்கும் முன் சோளமாவை (கார்ன் ப்ளார்) பாலில் கரைத்து கொண்டு சேர்த்து இறக்கவும் மிளகுத்தூளை தூவி பரிமாறவும்.
– தி.வள்ளி, திருநெல்வேலி
சீசனுக்கு ஏற்ற சுவை கொண்ட சூப்
ஆரோக்கியம் தரும் நல் உணவு… வாழ்த்துகள்