நவராத்திரி விரத மகிமையும் சிறப்பும்

“இறை இன்றி ஓர் அணுவும் அசையாது” இம்மையிலும் மறுமையிலும் நம்மை காத்து வழிநடத்தி வாழ்வாங்கு வாழ வழிவகுக்கும் ஒரு அற்புத பேராற்றல் இறை…( தெய்வம் கடவுள்)…. – navarathri viratham

navarathri viratham

அத்தகைய சிறப்புமிக்க இறையை வணங்கும் பொருட்டு நன்றி செலுத்தும் வகையில் நம் முன்னோர்கள் வழி வந்த அனைத்து பண்டிகைகளையும் இன்றளவும் நாம் பின்பற்றி வருகிறோம். விரதங்களை கடைபிடித்து வருகிறோம். அத்தகைய விரதங்களுள் முக்கியமான விரதம் முப்பெரும் தேவியர்( பார்வதி லட்சுமி சரஸ்வதி) ஆகியோரை வணங்கும் பொருட்டு புரட்டாசி மாதம் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி விரதம் மக்களால் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது

அத்தகைய விரதத்தை பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாமா !

புராணங்கள் போற்றும் விரதம்

புராணங்கள் போற்றும் புனிதமான விரதம், நவராத்திரி விரதம். மங்களங்கள் யாவும் தரும் மகத்தான நவராத்திரியை எப்படிக் கொண்டாடுகிறார்கள்?
நவராத்திரி விரதம், கும்ப பூஜையோடு தான் ஆரம்பமாகிறது. இச்சா, கிரியா, ஞான சக்திகளை அருளும் பூமகள், மாமகள், நாமகள் மூவரையும் ஒரே அம்சமாக, கலசம் ஒன்றில் எழுந்தருள வேண்டிடுவதுதான் இந்த பூஜை.
சரி இந்த விரதத்தை எப்படி தொடங்குவது…..

விரதம் தொடங்கும் முறை

நவராத்திரி தொடங்கும் நாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, கொலு வைக்கப்போகிற இடத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜையை தொடங்குவது பாரம்பரியமான வழக்கம். மணைப் பலகை ஒன்றை எடுத்துக்கொண்டு அதனை நன்கு கழுவி சுத்தம் செய்து, அதில் கோலம் போட்டுக் கொள்ளுங்கள்.அதன் மேல் நுனி வாழையிலை ஒன்றை வைத்து, கொஞ்சம் நெல் அல்லது அரிசியைப் (பச்சரிசி) பரப்பவும். அதன் மேல் தூய
நீர் நிரப்பிய வெள்ளி அல்லது செம்பு கலசத்தை வையுங்கள். . – navarathri viratham

சிறிதளவு பச்சை கற்பூரம், சந்தனம், ஓரிரு பூவிதழ்களை அந்த நீரில் இடவும். புதிய சில்லறைக் காசுகள் சிலவற்றையும் அதனுள் போடவும். செம்பின் வாய்ப் பகுதியில் புதிய மாவிலைகளை செருகி, மஞ்சள் பூசப்பட்ட ஒரு தேங்காயை அதன் மீது வையுங்கள். கலசத்தின் கழுத்தை சிவப்பு நிறத் துணியால் சுற்றி வையுங்கள்.

பூஜையறையில் விளக்கேற்றியபின், கலசத்தின் முன்பும் ஒரு விளக்கினை ஏற்றி வைக்கலாம். அவரவர் வழக்கப்படி குத்துவிளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கும் ஏற்றலாம். கலசத்தின் முன் ஒரு வெற்றிலையை வைத்து, அதன்மீது மஞ்சள் பொடியினால் பிள்ளையார் பிடித்து வையுங்கள்.

இந்தப் பிள்ளையாருக்கு குங்குமப் பொட்டிட்டு பூ சாத்துங்கள். பின்னர் கலசத்திற்கும் பொட்டு வைத்து, பூ சாத்தி, தூபம் ஏற்றி வையுங்கள். முதலில் பிள்ளையாரை வேண்டிக் கொண்டு, பிறகு துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி அம்மன்களை கலசத்தில் எழுந்தருளும்படி மனதால் வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு அவர்களுக்கு தூப, தீபம் காட்டி வணங்கிக் கொள்ளுங்கள். அடுத்து, காய்ச்சி சர்க்கரை சேர்த்த பாலை நிவேதனம் செய்யுங்கள்.

முடிந்தால் பால் பாயசமும் நைவேத்யம் செய்யலாம்.இந்தக் கலச அமைப்பினை அப்படியே வைத்திருந்து நவராத்திரியின் ஒன்பது நாட்களும், அடுத்த விஜயதசமியன்றும் முதல் பூஜையை இதற்கே செய்ய வேண்டும்.

கொலுவுக்கு உரிய நிவேதனமும் முதலில் இந்தக் கலச அமைப்பிற்கே செய்ய வேண்டும். அம்பிகை பற்றிய பாடல்களை படியுங்கள், கேளுங்கள். தினமும் இந்த பூஜையை செய்து முடிக்கும் வரை உணவு உட்கொள்ளாமல் இருப்பது சிறப்பு. முடியாதவர்கள் சிறிதளவு பால், பழம் எடுத்துக் கொள்ளலாம்.

முதல் நாள் அமைத்த கலசத்திற்கே அடுத்தடுத்த நாட்களில் புதுமலர் சாத்தி, நிவேதனமும் செய்ய வேண்டும். ஒன்பது நாட்களும் அம்பிகை பாடல்களைப்
பாடுவதும், கேட்பதும் தொடர வேண்டும்.- navarathri viratham

ஞானம், கல்வி, ஆயுள், ஆரோக்யம்

முதல் மூன்று நாட்களில் துர்க்கையையும், அடுத்த மூன்று தினங்களில் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியையும் வணங்குவது வழக்கம். நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள், சரஸ்வதிக்கு உரிய மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும் நாளில் சரஸ்வதி தேவி தோன்றுகிறாள் என்பது ஐதீகம். எதற்குமே ஒரு மூலம் உண்டு என்பதை உணர்த்தும் விதமாகவே கலைமகள் மூல நட்சத்திரத்தில் அவதரித்தாள் என்பர்.

ஞானம், கல்வி, இவை மட்டுமின்றி, ஆயுள், ஆரோக்யமும் கூட சரஸ்வதியின் கடாட்சத்தால் கிட்டும் என்கிறது பவிஷ்யோத்ர புராணம்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் பூஜை, விரதம் இவற்றை அனுஷ்டிக்க வேண்டும் என்றும், இயலாதவர்கள் அஷ்டமி திதி வரும் நாளில் மட்டுமாவது அவசியம் விரதம் இருக்க வேண்டும் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. விஜயதசமி தினத்தில், அம்பிகை வெற்றி வாகை சூடினாள். ஆணவம், சக்தியாலும்; வறுமை, செல்வத்தினாலும்; அறியாமை, ஞானத்தாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் அது. ஆகவே அன்றைய தினம் மிகவும் சிறப்புமிக்கது.

அன்று புதிதாகத் தொடங்கும் எந்தக் கலையும் எளிதாக வசமாகும் என்பது நம்பிக்கை. நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளும் இதுவே. விஜயதசமியன்று கலச பூஜையில் பயன்படுத்திய கலசத்தின் முன்பாக அமர்ந்து, முப்பெரும் சக்தியரையும் மனதால் வேண்டிக்கொண்டு ஆரத்தி எடுக்கலாம்.

முப்பெருந்தேவியரும் இந்தக் கலசத்தில் நிறைந்திருந்தது போல இனி என்றென்றும் நமது இல்லத்தில் நிலைத்திருக்க வேண்டிக் கொண்டு, கலசத்தில் உள்ள நீரை வீடு முழுதும் தெளித்து பூஜையினை முழுமை செய்யுங்கள். இந்த நவராத்திரி நாட்களில் அழகிய பொம்மைகளைக் கொண்டு கொலு வைப்பது பலருடைய வழக்கம். சிலர் ஒவ்வொரு வருடமும் பிரத்யேகமான ஓர் ஆன்மிகக் கருத்தை மூலமாக வைத்து பிரமாண்டமான வகையில் கொலு வைப்பார்கள்.

நீங்களும் கொலு வைக்க ஆசையா??? என்ன

கொலுக்களை வைக்கும் முறை

கொலு பொம்மைகள் வைப்பதில் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும் .மேல் படியில் கலசம் வைக்க வேண்டும் .ஒரு நாணயம் ஆகியவற்றை எட்டு மாவிலை கொத்து தேங்காய் கொண்டு மூடவேண்டும். அம்மன் முகம் இருப்பவர்கள் செம்பில் அதனையும் வைத்து அழகுபடுத்தலாம்.

அடுத்தபடியாக மரப்பாச்சி பொம்மைகளை வைக்கலாம் அடுத்த படியில் மற்ற கடவுளர்கள் ஆன சிவன் விஷ்ணு முருகன் போன்றவர்களின் பொம்மைகளை வைக்கலாம். அடுத்ததாக நாயன்மார்கள் ஆழ்வார்கள் போன்ற ஆன்றோர்களின் பொம்மைகளை வைக்கலாம்.

கடைசியில் சங்கு சிப்பி மாக்கள் பொம்மைகள் பலாக்காய் சோப்பு போன்ற பொருள்களை வைக்கலாம் .பொருள்கள் ஓரறிவு ஈரறிவு கொண்ட உயிர்கள் அடுத்த படியில் ஆறறிவு பெற்ற மாந்தர்கள் பின்னர் அடியார்கள் பிறகு தேவர்கள் முதலானோர்கள் முதல் படி அதாவது மேல்படி கடவுளர்கள் என வைத்தல் வேண்டும் .

இது பரிணாம வளர்ச்சியைக் காட்டுகின்றது படிக்கும்போது சிவன் பார்வதி பெருமாள் தாயார் போன்ற ஜோடிகளை பிடித்து வைக்காமல் சேர்த்து வைக்க வேண்டும் மற்றபடி இரண்டு புறாக்கள் இரண்டு பூனைகள் இரண்டு நாய்கள் என்றபடி கொலுக்கள் இருந்தாலும் இந்த ஓரத்திலும் அந்த ஓரத்திலும் ஒன்றுமாக
அமர்த்தலாம்.

கொலு வைப்பதால் என்ன நன்மை நமக்கு…. அடுத்தவார பதிவில் தொடர்ந்து வாசிக்கலாம் …

You may also like...

5 Responses

  1. Rajakumari says:

    மிகவும் முக்கியமான பயனுள்ள தகவல் நன்றி

  2. தி.வள்ளி says:

    மிக அருமையான பதிவு நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது
    நவராத்திரி விரதத்தின் மகிமை, விரதம் இருக்கும் முறை ,கொலுவின் தாத்பரியம் எல்லாவற்றையும் அழகாக கொடுத்தது இப்பதிவு

  3. Naveen Naresh says:

    மிகவும் அருமையாக அருமையான உபயோகமுள்ள பதிவுகள்

  4. Rajakumari says:

    நவராத்திரி முக்கிய திருவிழா அது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன நன்றி

  5. Damayanthi Damayanthi says:

    மிகவும் நன்று.