பல பருப்பு தோசை (அ) அடை

நாள்தோறும் இட்லி, தோசை என சாப்பிட்டு சலிப்புத்தட்டியிருக்கும். அதனால் ஒரு சிறு மாற்றம். வழக்கமான அடை சாப்பிட்டிருக்கிறோம். அதேபோல ஒரு சத்து மிகுந்த சிற்றுண்டி தான் இந்த பல பருப்பு அடை – paruppu adai dosai

pala paruppu dosai adai

தேவையான பொருள்கள்

இட்லி அரிசி – 1 சிறு டம்ளர் அளவு (100 கிராம்)
பச்சரிசி – அதே அளவு
துவரம் பருப்பு – சிறு டம்ளரில் பாதி (50கிராம்)
பச்சைப் பயறு – அதே அளவு
கடலை பருப்பு – அதே அளவு
கருப்பு சுண்டல் – அதே அளவு
கருப்பு உளுந்து – அதே அளவு
கொள்ளு – அதே அளவு
மிளகாய் வற்றல் – 10 அல்லது தேயைானது
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு- 10 பற்கள் உரித்தது
வெங்காயம் – 2 பெரியது
கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேயைான அளவு

செய்முறை

அரிசி மற்றும் பருப்பு வகைகளை நான்கு மணி நேரம் நன்கு ஊறவைத்து கலவை இயந்திரத்தில் அரைத்துக்கொள்ளவும். அதனுடன் வற்றல்,இஞ்சி பூண்டு அனைத்தையும் சேர்த்துக்கொள்ளவும் – paruppu adai dosai

பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் விரும்பினால் சோம்பு போட்டு தாளித்து கறிவேப்பிலையுடன் மாவில் சேர்த்துக் கலக்கவும். தேயைான உப்பு சேர்த்து கிளறி உடனே அடையாக வார்க்கலாம். மாலை ஆட்டி இரவு புளிக்க வைத்து மறுநாள் தோசையாகவும் வார்க்கலாம்.

இதில் அனைத்து பருப்புகளும் கலந்துள்ளதால்,மாவுச் சத்து மற்றும் புரதச் சத்தும் நிறைந்தது நீரிழிவு நோயாளிகள் தாராளமாக உண்ணலாம். குறிப்பு: இதற்கு தொட்டுக் கொள்ள அவியல், நாட்டுச் சர்க்கரை மற்றும் நிலக்கடலை
சட்டி்னி ஏற்றவை.

– ஏஞ்சலின் கமலா, தமிழ் ஆசிரியை, மதுரை

You may also like...

7 Responses

  1. SIVARAMAKRISHNAN says:

    அருமை

  2. தி.வள்ளி says:

    அருமையான சத்து நிரம்பிய உணவு…

  3. padhma says:

    super recipe – padhma sridhar from tirunelveli

  4. surendran sambandam says:

    சத்தான சுவையான தோசை

  5. N.sana says:

    தனித்துவமான சிற்றுண்டி…. அருமை தோழி…

  6. கு.ஏஞ்சலின் கமலா says:

    பின்னால் இருந்து ஊக்கம் தரும் அன்பு
    உள்ளங்களாகிய உங்களுக்கு என்
    நன்றியை உரித்தாக்குகின்றே்ன்

  7. Khusnara banu says:

    Arumaiya padhuvu…kulandhaigalukku sirandha unavu