பெண்!!!! – யாரிவள்?? எதற்காக படைக்கப்பட்டாள்???

ஆசிரியரை சிறப்பிக்கும் பதிவுகளில் முதல் பதிவாக பெண் பற்றிய ஆக்கபூர்வமான கட்டுரையை வாசித்து கருத்து தெவிவிக்கவும் – pen yaar ival katturai

pen yaar ival katturai

யாரிவள்?? எதற்காக படைக்கப்பட்டாள்??? பிறப்பின் நோக்கம் தான் என்ன???? இதம் தரும் கனவுகளையும், காட்சிகளையும் சுமக்கும் விழிகள் என்றுமே அழகு, அவளுக்கு மட்டும் கண்ணீரையும் சேர்த்து சுமக்கும் காரணம் என்ன??

உற்றார்,உடையார், மற்றோருக்காக மகளாக,மனைவியாக, தாயாக,தமக்கையாக, சகோதரியாக, சகாவாக, சேவகியாக, உடலாலும்,உள்ளத்தாலும் சலனமின்றி, சளைக்காமல் வாழ்கிறவள், தனக்காக தன் வாழ்நாளில் வாழ்ந்த நிமிடங்கள் எப்போது???

சுயநலமே பொதுநலமென கருதி அவளை அண்டி வாழும் நல்லுள்ளங்கள் மத்தியில் பொதுநலமே சுயநலமாக நினைந்து தன்னை அர்ப்பணிக்கும் அவளது எண்ணங்களில் தோன்றும் சின்ன சின்ன ஆசைகள் என்ன??? அவள் கனவுகள் தான் என்ன??? விருப்பம் எது???? லட்சியம் என்ன??? என்றாவது சிந்தித்ததுண்டா?? பெண்ணாக பிறந்ததால் பொக்கிஷமென நவரத்தின பதுமையாக்கி தங்கக்கூண்டுக்குள் காக்கப்படும் காரிகை அவளுக்கு சிறிது கூட சிந்திக்க நேரம் கொடுக்கப்படவில்லை அவளை பற்றி அவளறிந்துகொள்ள..??!! இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள் புதைந்த இதயத்தின் திறவுகோலாக…..

புதிய சிந்தனைகளின் தூறல்களாக….
வாழ்வை வசந்தமாக்கிட….
உதயமாகிறாள்…..
“ஆகரி”….

இனி நாள்தோறும் ஆழ்மன ,ஆழமான கருத்துக்களோடும், விசாலமான பார்வையோடும் பெண்கள் பற்றிய என் சிந்தனைகளை தங்களோடு பகிர்கிறேன் உங்களில் ஒருவராக…. உங்கள் தோழி…. ஆகரியாக – pen yaar ival katturai

ஆகரி…

உன்னை(ண்மை) தெளிந்து உணர்!!!

அழகு தமிழ் கூறும் பத்து பிள்ளை பருவங்களையும் பக்குவமாக கடந்து, பேதையாக வளர்ந்து,பெதும்பையாக உருமாறி, மங்கையாகும் பெரும்பேறு பெற்று, மடந்தையாகி,அரிவை தெரிவை என்று முன்னேறி, இறுதி பருவமெனும் பேரிளம் பெண்ணாக இளைப்பாறிக்கொண்டிருக்கிறோம்.

இந்த பருவங்களில் பெண் அடையும் உருவ மாற்றமும்,உணர்வு மாற்றமும் வியப்பளிக்கக்கூடியதாகவே தோன்றும். இந்த மாற்றங்களை குறித்த முன்னறிவிப்பை பெண்கள் பெறாத காரணத்தால் ஏற்படும் அச்சம், மனகுழப்பம் இன்றும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது…. நம்மில் பலர் தெளிவு பெற்றிருப்பினும் இன்னும் பல பெண்கள் தெளிவில்லா நிலையிலேயே இருக்கின்றனர்.

பெண்களை பற்றிய இந்த மாற்றங்கள் பெண்களால் பெண்களுக்கு முன்னறிவாக கூட சொல்லிதரப்படவில்லை என்பது மிக வேதனை. காரணம் , காலம்காலமாக இந்த விஷயங்களை வெளிப்படையாக பேசுவதை கூட தவறாக எண்ணி கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக எத்தனை எத்தனை வேதனைகளை நாம் கடக்க நேர்ந்திருக்கும்???. ஏனிந்த நிலை பெண்ணுக்கு?? எந்த செயல்களை பெண் செய்யலாம், செய்யக்கூடாது,எப்படி நடந்துகொள்ள வேண்டும்?எப்படி உடை உடுக்க வேண்டும்?எப்படி பழக வேண்டும் என்று வெளிப்படையாக சொல்லிக்கொடுத்த சமூகம் ஏனோ ஏன்?எதற்காக என்ற காரணத்தை மறைமுகமாகக்கூட தெரிவிக்காததன் சூட்சுமம் தான் என்ன???

இங்குதான் பெண்கள் தங்களை உணர்தல் மிக முக்கிய மாகிறது. எந்த ஒரு விஷயத்தையும் ஏன் எதற்கு என்ற வினாக்களை எழுப்புங்கள் ?? எந்த விஷயங்களையும் அப்படியே ஏற்று கொள்ளாமல் சிந்தனை கேள்விகளை உங்களுக்குள் கேட்டு தெளிவு பெறுங்கள் – pen yaar ival katturai.

சுயம் உணர்ந்து சித்தம் தெளி!!
கேள்வி கனைகளை உன்னுள் எறி!!!

– கவி தேவிகா, தென்காசி

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    பெண்கள் தங்களை உணர்தல் முக்கியம்…எதையும் கண்மூடித்தனமாக ஏற்காமல் ஏன் எதற்கு என்ற வினா எழுப்புங்கள். ..அருமையான கருத்துக்கள் கவி தேவிகாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்💐💐💐💐