பாட்டி வைத்தியத்தில் பெண்களுக்கான தீர்வுகள்Y
பாட்டிவைதியத்தில் பெண்களுக்கான தீர்வுகள் pengalukkaana paatti vaithiya muraigal:
*மாதவிலக்கு பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயத்தாள், காய வைத்த கருப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும் மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு ஏற்படும்
*விளா மரத்தின் பிசினை மஞ்சள் சேர்த்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைபடுதல் குணமாகும்
*வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அ தில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வெள்ளைபடுதல் குணமாகும்
*வல்லார கீரை சாற்றில் பெரும் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு கோளறு சரியாகும்
*லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும்2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின்போது அதிக இரத்தப்போக்கு நிற்கும்
*முள் இலவம் பட்டையை 200 கிராம்அளவுக்கு எடுத்து பொடிசெய்து காலை மாலை இருவேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு ஏற்படும்
*முருங்க கீரையை அடிகடி உணவில் சேர்த்து கொண்டால் கருப்பை பலப்படும்.