பெற்றவரைக் காப்போம்

வரம் வேண்டும்
இறைவா தர வேண்டும்
என்பொருக்கு
தினம் தினம் ஆயிரம் வரங்களை
அள்ளித்தரும் கடவுள் படைப்பே
பெற்றோர் – petravarai kappom.

இலக்கியத்தில் சுவைக்கு பஞ்சமில்லை
தாயின் அன்பும்
தந்தையின் அர்ப்பணிப்பும்
அதை மிஞ்சும் நிஜங்கள்.

எதிர்பார்ப்பு எனும் ஏணி
இல்லா சுயம்பு மணற்கேணி.

வாழ்வில் நாம் விழுந்ததற்கும்
வீழாமலிருப்பதற்கும்,
அகப்புற காயங்களுக்கு மருந்திட்டு,
உணவிலே ஊக்கமலித்த உன்னத
உறவுகளை காப்போம்.

நீரோடை மகேஷ்

You may also like...