பெண்மை – கவிதை பதிவு 2
சுயத்தை மஞ்சள் கயிற்றில் நனைத்து
தன் பிள்ளையின் தொப்புள் கொடியில் காயவிட்டு
குடும்பமாகிய செடிக்கு உரமாக்கி
அதனுள்ளே மாண்டு உறவுகளால்
உணரப்படாதவள், பெண்!! – penmai kavithai
பெண்,
தெய்வம் அல்ல!
சக்தி ரூபம் அல்ல!
தேவதை அல்ல!
தெய்வம் அல்ல!
தென்றல் அல்ல!
மலர் அல்ல!
நெருப்பு அல்ல!
பொன் அல்ல!
தியாகி அல்ல!
பேதை அல்ல!
போதையும் அல்ல!
ஆம்!
உன் சக உயிர்!
ஊன், உதிரம், உணர்ச்சிகளால் நிரம்பிய இணை!
ஊளைச் சதையின் மேல் ஊக்கம் கொள்ளாமல் நிதர்சனம் ள்வாயாக!
அருவ-வழிபாடு செய்யும் நீ
உருவ-வேறுபாடு காண்பது ஏன்?!
போற்று தலும் தேவையில்லை
புறந்தள்ளவும் தேவையில்லை!
புரிதல் போதும்!
“ஆணே, பெண் உன் அர்ப்பிதம்! ” – penmai kavithai
இது பழைய கற்பிதம்!
அகந்தை எறிந்து
ஆணவம் துறந்து
மானுடம் பழகு
எம் தோழனே!!
– ஆனந்தி, ஓசூர்
இன்னும் சில இடங்களில் பெண்ணிற்கு இந்த நிலை தொடர்கிறது என்பது நிதர்சனம்.
வாவி.ச.சீனிவாசன் அவர்கள் எழுதிய “பெண்மை” 1 பதிவை வாசிக்க