திருமண பொருத்தம்

1) தினப்பொருத்தம்

மொத்தம் உள்ள 27 நச்சதிரங்களின் வரிசையில் பெண் நட்சத்திரம் முதல் எண்ணி வருகையில் ஆணின் நட்சத்திரம் 2,4,6,8,9,11,13,15,18,20,24,26 ஆகவரின் உத்தமம்.(அ) அடுத்து எண்ணி வந்த தொகையை 9 ஆல் வகுத்து மீதி 2,4,6,8,9 ஆக வரின் உத்தமம்.இவை முக்கிய பொருத்தம் thirumana porutham tamil.

2) கணப்பொருத்தம்

தேவகணம் – மனிதகணம் – இரட்சத கணம்

  1. அஸ்வினி – பரணி – கிருத்திகை
  2. மிருகசிரிஷம் – ரோகினி – ஆயில்யம்
  3. புனர்பூசம் – திருவாதிரை – மகம்
  4. பூசம் – பூரம் – சித்திரை
  5. அஸ்தம் – உத்திரம் – விசாகம்
  6. சுவாதி – பூராடம் – கேட்டை
  7. அனுஷம் – உத்திராடம் – மூலம்
  8. திருவோணம் – பூரட்டாதி – அவிட்டம்
  9. ரேவதி – உத்திரட்டாதி – சதயம்

மேற்கண்டபடி,

  1. இருவரும் ஒரே கணம் (அ) பெண் மனுசகணம் ஆண் தேவ கணம் ஆயின் உத்தமம்.
  2. பெண் தேவகணம் , ஆண் மனுசகணம் (அ) பெண் தேவகணம் ஆண் இரட்சதகணம் ஆயின் மத்திமம் (செய்யலாம் )

3) மகேந்திர பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் எண்ணி வர ஆணின் நட்சத்திரம் 1,4,7,10,13,16,19,22,25 ஆயின் உத்தமம். (அ ) மேல் கண்டபடி எண்ணி வரும் எண் 13 க்கு மேல் வரின் உத்தமம் இவை புத்திர விருத்தியை குறிக்கும்.

4) யோனி பொருத்தம்

  1. ஆணுக்கு ஆண்யோனி பெண்ணுக்கு பெண்யோனி வந்தால் உத்தமம்.
  2. ஆண் ,பெண் இருவருக்கும் பெண்யோனி உத்தமம்.
  3. ஆண் ,பெண் இருவருக்கும் ஆண்யோனி மத்திமம்.

நட்சத்திர மிருகம்

அஸ்வினி – ஆண்குதிரை
பரணி – ஆண்யானை
கிருத்திகை – பெண் ஆடு
ரோகினி – ஆண் நாகம்
மிருகசிரிஷம் – பெண் சாரை
திருவாதிரை – ஆண்நாய்
புனர்பூசம் – பெண்நாய்
பூசம் – ஆண்ஆடு
ஆயில்யம் – ஆண்பூனை
மகம் – ஆண் எலி
பூரம் – பெண் எலி
உத்திரம் – எருது
அஸ்தம் – பெண்எருமை
சித்திரை – ஆண் புலி
சுவாதி – ஆண்எருமை
விசாகம் – பெண்புலி
அனுஷம் – பெண் மான்
கேட்டை – ஆண்மான்
மூலம் – பெண்நாய்
பூராடம் – ஆண்குரங்கு
உத்திராடம் – மலட்டு பசு
திருவோணம் – பெண்குரங்கு
அவிட்டம் – பெண்சிங்கம்
சதயம் – பெண்குதிரை
பூரட்டாதி – ஆண்சிங்கம்
உத்திரட்டாதி – பசு
ரேவதி – பெண்யானை

பகையோனிகள்

யானைக்கு – சிங்கம் , மனிதன்
குதிரைக்கு – பசு ,எருமை
மான் ,நாய் – புலி
குரங்குக்கு -ஆடு
எலிக்கு – பூனை, பாம்பு
பாம்புக்கு – கீரி, ஆடு
பூனைக்கு – நாய், புலி

இவைகளை பார்த்து யோனி பொருத்தம் பார்க்கவேண்டும்.

Thirumana porutham tamil

5) ராசிப்பொருத்தம்

பெண் ராசியும்,ஆண் ராசியும் ஒரே ராசியாயினும் (அ ) பெண் ராசிக்கு ஆண் ராசி 6க்கு மேற்படினும் உத்தமம் இவை குடும்ப சுகத்தை குறிக்கும்.

6) ராசி அதிபதி பொருத்தம்

ராசி நட்பு சமம் பகை
சூரியன் கு,சந்,செவ் புதன் சுக்,சனி
சந்திரன் சூரி,புதன்செ ,கு ,சுக் சனி
செவ்வாய் கு,சந்,சூ சுக்,சனி புதன்
புதன் சூ,சுக் செ,கு,சனி சந்
குரு சூ,ச,செ சனி பு ,சந்
சுக்கிரன் பு,சனி செவ்,குரு சூ,சந்
சனி பு,சுக் குரு சூ,ச ,செவ்

இதில் கண்ட கட்டப்படி,

  • பெண், ஆண் ரசி அதிபதிகள் நட்பாயின் (அ ) ஆண்,பெண் ரசி அதிபதிகள் சமம் ஆயினும் உத்தமம்.
  • பெண் ராசி அதிபதியும் ,ஆண் ரசி அதிபதியும் பகை, நட்பு ஆயின் மத்திமம்.

7) வசியப் பொருத்தம்

  1. மேஷ ராசிக்கு – சிம்மம் ,விருச்சிகம் வசியம்
  2. ரிசபதிற்கு – கடகம் ,துலாம் வசியம்
  3. மிதுனத்திற்கு – கன்னி,கன்னி வசியம்
  4. கடகத்திற்கு – விருச்சிகம்,தனுசு வசியம்
  5. சிம்மத்திற்கு – மகரம்,தனுசு வசியம்
  6. கன்னிக்கு – ரிசபம்,மீனம் வசியம்
  7. துலாம் – மகரம் வசியம்
  8. விருச்சிகம் – கடகம்,கன்னி வசியம்
  9. தனுசுக்கு – மீனம் வசியம்
  10. மகரம் – கும்பம் வசியம்
  11. கும்பம் – மீனம் வசியம்
  12. மீனத்திற்கு – மகரம் வசியம்
  1. பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமாயின் உத்தமம்.
  2. ஆண் ராசிக்கு பெண் ராசி வசியமாயின் மத்திமம்.

8) ரச்சுப் பொருத்தம்: ( 5 வகை உண்டு )

  1. பாதரச்சு – அஸ்வினி, மகம்,மூலம்,ஆயில்யம்,கேட்டை, ரேவதி
  2. தொடைரச்சு – பரணி,பூரம் ,பூராடம்,பூசம்,அனுஷம்,உத்திரம்
  3. உதரரச்சு – கிருத்திகை,உத்திராடம்,புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி
  4. கழுத்து ரச்சு – ரோகினி,அஸ்தம் ,திருவோணம்,திருவாதிரை,சுவாதி,சதயம்
  5. சிரசு ரச்சு – மிருகசிரிஷம்,சித்திரை,அவிட்டம்,உத்திரட்டாதி

பெண் நட்சத்திரம், ஆண் நட்சத்திரம் ஒரே ரச்சுவாயின் பொருந்தாது மாற்று ரச்சுவாயின் உத்தமம்.இரண்டும் ஒன்று பாதரச்சனால் பிரயாண தீங்கு மற்றவை ஒன்றானால் மரணம்.

9) வேதை பொருத்தம்

  1. அஸ்வினி நட்சத்திரத்துக்கு – கேட்டை வேதையாகும்
  2. பரணி நட்சத்திரத்துக்கு – அனுஷம்
  3. கிருத்திகை நட்சத்திரத்துக்கு – விசாகம்
  4. ரோகினி நட்சத்திரத்துக்கு – சுவாதி
  5. திருவாதிரை நட்சத்திரத்துக்கு – திருவோணம்
  6. பூசம் நட்சத்திரத்துக்கு – பூராடம்
  7. ஆயில்யம் நட்சத்திரத்துக்கு – மூலம்
  8. மகம் நட்சத்திரத்துக்கு – ரேவதி
  9. பூரம் நட்சத்திரத்துக்கு – உத்திரட்டாதி
  10. உத்திரம் நட்சத்திரத்துக்கு – பூரட்டாதி
  11. அஸ்தம் நட்சத்திரத்துக்கு – சதயம்

வேதை உண்டாக வில்லையாயின் உத்தமம்.

10) விருட்ச பொருத்தம்

நட்சத்திரம் பால்உள்ளது பால்இல்லாதது
அஸ்வினி ——- எட்டி
பரணி ——- நெல்லி
கிருத்திகை அத்தி ——-
ரோகினி நாவல் ——-
மிருகசிரிஷம் ——- கருங்காலி
திருவாதிரை ——- செங்கா
புனர்பூசம் ——- மூங்கில்
பூசம் அரசு ——–
ஆயில்யம் புன்னை ——–
மகம் ஆல் ——–
பூரம் பலா ——-
உத்திரம் அலரி ——–
அஸ்தம் அத்தி ——–
சித்திரை ——- வில்வம்
சுவாதி ——- மருதம்
விசாகம் ——– விளா
அனுஷம் ——– மகிழ்
கேட்டை பராய் ——-
மூலம் மரா ——-
பூராடம் வஞ்சி ——-
உத்திராடம் பலா ——–
திருவோணம் எருக்கு ——–
அவிட்டம் ——– வன்னி
சதயம் ——– கடம்பு
பூரட்டாதி தேமா ——–
உத்திரட்டாதி ——– வேம்பு
ரேவதி இலுப்பை ——–

மேற்கண்டவையில்,

  1. ஆண் ,பெண் இருவருக்கும் பால் உள்ள மரம் (அ ) பெண் மட்டும் பால் உள்ளவையாயின் உத்தமம்.
  2. ஆண் பால், பெண் பால் இல்லையாயின் மத்திமம்.

11) ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்:

பெண் நட்சத்திரம் முதல் எண்ணி ஆணின் நட்சத்திரம் 13க்கு குறைவாக இருப்பின் பொருத்தம் இல்லை. 13க்கு மேலாக இருப்பின் உத்தமம். இவை பெண்ணின் ஆயுள் பலத்தை காட்டும்.

12) வசியப் பொருத்தம்

பெண் ராசி ஆண் ராசி

  1. மேஷ ராசிக்கு – சிம்மம் ,விருச்சிகம்
  2. ரிசபதிற்கு – கடகம் ,துலாம்
  3. மிதுனத்திற்கு – கன்னி,கன்னி
  4. கடகத்திற்கு – விருச்சிகம்,தனுசு
  5. சிம்மத்திற்கு – மகரம்,தனுசு
  6. கன்னிக்கு – ரிசபம்,மீனம்
  7. துலாம் – மகரம்
  8. விருச்சிகம் – கடகம்,கன்னி
  9. தனுசுக்கு – மீனம்
  10. மகரம் – கும்பம்
  11. கும்பம் – மீனம்
  12. மீனத்திற்கு – மகரம்

இவைகள் வசியம் ஆகும் மற்றவை பொருந்தாது.JO

13) நாடிப் பொருத்தம்:

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக இருத்தல் வேண்டும்.

நாடி விபரம்

பார்சுவ நாடி மத்ய நாடி சமான நாடி

அஸ்வினி, திருவாதிரை பரணி கிருத்திகை,ரோகினி
புனர்பூசம்,உத்திரம் மிருகசிரிஷம் ஆயில்யம்,மகம்
அஸ்தம்,கேட்டை பூசம்,பூரம்,சித்திரை சுவாதி,விசாகம்
மூலம்,சதயம் அனுஷம்,பூராடம் உத்திராடம்,திருவோணம்,ரேவதி
பூரட்டாதி, உத்திரட்டாதி அவிட்டம்

முக்கிய பொருத்தங்கள்:

  1. தினம்
  2. கணம்
  3. யோனி
  4. ராசி (அ) ராசி அதிபதி
  5. ரச்சுப் பொருத்தம் (மிக முக்கியம் )

You may also like...