பொங்கல் கவிதை (கவிதை தொகுப்பு – 35)
பொங்கல் சிறப்பு கவிதை தொகுப்பு, கவிஞர்கள் சீனிவாசன், மணிகண்டன் மற்றும் மா கோமகன் ஆகியோரின் வரிகளை வாசித்து பின்னூட்டம் பதிவு செய்யவும் – pongal kavithai thoguppu 2021
உழவன் என் தலைவன்
உலகத்தாரே உங்களிடம்
ஒன்று சொல்வேன் நீர்
அறிந்த கதைதானாம்
தலைவனுக்கானதொரு
அடிப்படை தகுதி யாது
எனத் தெரியுமா அது
எதிர்பார்ப்பில்லாதொரு
பொது உழைப்பேயாம்
ஓய்வூதியமுமில்லை
வைப்பு நிதியென்றும்
ஏதுமில்லை மாதந்
தோறும் ஊதியமில்லை
முன்னுரிமையில்லையே
உழைப்பிற்கேற்றதொரு மரியாதையுமில்லை
அவ்வளவு ஏன் தனது உன்னத
உயிருக்கு கூட உத்திரவாதமில்லை
என்றேதான் கூறும் ஒரு
தொழிலை நீங்களுமே
செய்யத் தயார் என்றால்
அது விவசாயம் என்பதே
தன் உழைப்பு கண்முன்
திருடப்படுகிறதேன்றே
தெரிந்தும் உழைக்கும்
இங்கு இரு உயிரினமே
உண்டென்றால் ஒன்று
தேனீ மற்றொன்று தான்
விவசாயி என்பதை நாம் உணர்ந்தோமா
கணிணியில் உழைப்பு மரியாதை
பெறுவதும் கழனியில் உழைப்பை
கேவலம் எனக் கருதும் மனப்பாங்கே
படித்தால் மட்டும் வேலை கிடைக்குமென்றேதான்
தெரிந்த நமக்கெல்லாம்
விதைத்தால் மட்டுமே
உணவு கிடைக்குமென்ற உணர்வு வரவில்லையே
உலகில் மேன்மையுறு
ஒரு செயல் விவசாய
தொழிலென அறிந்தோர்
உரக்க சொல்லுங்கள்
உழவன் என் தலைவன்
என்றே
– மா கோமகன்
பொங்கல் தினம்
பரம்பிழுத்து..
விதை விதைத்து..
நாற்று நட்டு..
களை எடுத்து..
செந்நிறம் பூண்டு..
காத்திருந்து கருத்தரித்த நெல்மணியை..
ஆரம்பம் முதல் அறுவடை வரை…
உழைத்திட்ட உழவனும்..
உழுதுண்ட காளையும்..
காவலனாய் கதிரவனும்..
காதலியாய் திங்களும்..
பங்களிப்பை பதிவு செய்து.. – pongal kavithai thoguppu 2021
உலகிற்கு உணவு தந்த இந்த நாளே..
நன்றியை நட்டு வைக்கும் தமிழர் திருநாள் தான்..!!
ஆம் இது ஒரு இனத்தின் திருநாள் தான்..
நாம் யாவும் தமிழர் என்று மனதினில் நினைக்கும் மக்களின் திருநாள் தான்..
சாதிகளை தூக்கிப் பிடிக்காத ஓர் பொங்கல் திருநாள் தான்..
அது இந்த சமத்துவ தமிழர் திருநாள் தான்…!!
– மணிகண்டன் சுப்பிரமணியம்
கவிதைகளனைத்தும் அருமை , மனதில் மகிழ்வுகள் நிறைகின்றது , கவித்துவங்களை அருமையாக வடிவமைத்த கவிஞர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகின்றேன்