ரங்கோலி கோலம்

rangoli kolangal

வீட்டின் முன் போடப்படும் கோலம் வெறும் அலங்கார பொருள் மட்டும் அல்ல வீட்டிற்கு வரும் நபர்களின் மனதை வாசலில் நுழையும் போதே மென்மையாக்கி உள்ளே அனுப்பும் என்பார்கள் சிலர்.சில வடிவங்கள் மனிதர்களின் மனநிலையை மென்மையாக்கும் சக்தி கொண்டது என்பதை ஒரு ஜோதிடர் கூற கேட்டிருக்கிறோம். நமது வீட்டின் முன் இடப்படும் கோலமானது ஒரு குறிப்பிட்ட வடிவங்களில் இருப்பது சிறந்தது.நமது வீட்டிற்கு நல்ல ஆற்றலை பெற்று தரக் கூடியது மற்றும்  நல்ல சக்தியை உள்ளே கொண்டுவரக் கூடியது. மாங்கல்ய பூஜை முதல் பேய் ஓட்டுவது வரையிலான பல்வேறு விதமான செயல்களுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் கோலமானது  முக்கியமான இடத்தை பெறுகிறது.
yugathi kolangal photo
சிலர் வீட்டின் முன் வெறும் அரிசி மாவில் சாதாரணமாக  சிறிய கோலமாவது இடுவார்கள், அவர்களிடம் கேட்டால் அழகிற்காக போடபட்ட கோலமில்லை, நேரம் இல்லாத நாட்களிலும் இது போன்ற கோலங்கள் போடுவது வீட்டின் முன் சுற்றித்திரியும் எறும்பு போன்ற ஊர்வன உயிரினங்களுக்கு உணவாகட்டும் என்ற எண்ணத்தில்தான் என்று மனதை தொடும் பதிலை தருவார்கள்.
yugathi kolangal
இரசாயன பொடிகள் மற்றும் சுண்ணாம்பு கலந்த பொடிகளில் கோலமிடுவதை தவிர்க்கவும்  அறிவுரை வழங்குவார்கள் சில வீடுகளில் முக்கோண வடிவில் கோலமிட்டு நடுவில் பசு சாணத்தில் பிள்ளையார் பிடித்து அருகம்புல் வைப்பதும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
யாகம் நடத்துவோரின் பயன்பாட்டுக்ககவும் இது உபயோகமானதாக கூறப்படுகிறது.
 பொங்கல் அன்று நடத்திய கோலப்போட்டியின் படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

You may also like...