வார ராசிபலன் வைகாசி 23 – வைகாசி 29
வைகாசி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal june-06 to june-12.
மேஷம் (Aries):
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். குழந்தை பாக்கியம் அமையும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் வசம் பாசம் காட்டவும். பணியாளர்கள் கூடுதல் வேலை செய்ய வேண்டியிருக்கும். வியாபாரத்தில் சுமாரான லாபமே எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் மந்தநிலையில் காணப்படுவார்கள். மாணவர்கள் செலவு அதிகரிக்கும். விவசாயத்தில் சுமாரான வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
ரிஷபம் (Taurus):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். உங்கள் காரியம் வெற்றி அடையும். தந்தைக்கு உடல்நல குறைவு வரலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் மேன்மை அடைவார்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். கலைஞர்கள் புதிய வருவாய் பெறுவார்கள். மாணவர்கள் வெற்றி காண்பார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.
மிதுனம் (GEMINI):
இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பூமி சம்பந்தமான பிரச்சனை முடிவுக்கு வரும். அரசாங்க ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பம் சந்தோசமாக காணப்படும். உங்கள் வாழ்வில் நிம்மதி அடைவீர்கள். பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். வியாபாரம் நன்கு உயர்வு அடையும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் வாழ்வு இழுபறி நிலை நீடிக்கும். விவசாயம் நன்மை அடையும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்
கடகம் (Cancer):
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். உடல் நிலை ஆரோக்கியமாக காணப்படும். மனதில் நல்ல ஆற்றல் பிறக்கும். சகோதர வழியில் சிறு குழப்பங்கள் வரலாம். எதிலும் கவனமாக செயல்படவும். பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயம் லாபம் அடையும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.
சிம்மம் (LEO):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். உடல்நலம் ஆரோக்கியமாக காணப்படும். எதையும் தீர ஆலோசித்து செய்யவும். எதிர்பாராத செலவுகள் வரலாம். பணியாளர்கள் கூடுதல் வேலை செய்ய வேண்டியிருக்கும். வியாபாரத்தில் நஷ்டம் அடையாது. கலைஞர்கள் அரசாங்க உதவி பெறுவார்கள். மாணவர்கள் குழப்பம் அடைவார்கள். விவசாயத்தில் சுமாரான வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.
கன்னி (Virgo):
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். உடல் நலத்தில் சற்று அக்கறை காட்டவும். எதிலும் அமைதி காக்கவும். பணவரவு சுமாராக இருக்கும். பணியாளர்கள் திறமையுடன் செயல்படுவார்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். கலைஞர்கள் சிரமப்படுவார்கள். மாணவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விவசாயத்தில் குறைந்த லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
துலாம் (Libra):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். வீட்டில் குழந்தை பாக்கியம் அமையும். பணவரவு நன்றாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியடையும். ஆரோக்கியத்தில் கவனம் காட்டவும். பணியாளர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் பாக்கி வசூல் செய்யப்படும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.
விருச்சிகம் (Scorpio):
இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணவரவு சுமாராகவே காணப்படும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் புதிய யுக்தியை பயன்படுத்துவீர்கள். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலைப் பின்பற்றவும். விவசாயிகள் பாக்கியவான்கள் ஆவார்கள்.
பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமை அன்று பைரவர் வழிபாடு செய்து வரவும்.
தனுசு (Sagittarius):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஒற்றுமையுடன் காணப்படும். உடல்நல பாதிப்புகள் வரலாம். எதையும் யோசித்து செயல்படவும். பழைய வீடு புதுப்பிக்க வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் புதிய பதவி அடைவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். கலைஞர்கள் மக்கள் ஆதரவு பெறுவார்கள். மாணவர்களுக்கு அதிக முயற்சி தேவை. விவசாயம் நஷ்டமே அடையும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
மகரம் (Capricorn):`
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். வாழ்வில் முக்கிய வெற்றியடைவீர்கள். உடல்நலம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு சுமாராகவே இருக்கும். சகோதர வகையில் ஒற்றுமை நிலவும். பணியாளர்கள் செல்வாக்கு பெறுவார்கள். வியாபாரம் சுமாராக அமையும். கலைஞர்கள் தேவை பூர்த்தி அடையும். மாணவர்களுக்கு பெற்றோர் ஆதரவு கிடைக்கும். விவசாயத்தில் குறைந்த ஆதாயமே கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.
கும்பம் (Aquarius):
இந்த வாரம் குரு பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமையும். பணியாளர்களுக்கு பண உதவி கிடைக்கும். வியாபாரம் சமச்சீராக காணப்படும். கலைஞர்களுக்கு எதிர்பாராத வருவாய் கிடைக்கும். மாணவர்கள் பிரகாசம் அடைவார்கள். விவசாயத்தில் பிரச்சனை வரலாம்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.
மீனம் (Pisces):
இந்த வாரம் ராகு பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். எதிரி தொல்லைகள் நீங்கும், கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். உறவினர்கள் ஆதரவு தருவார்கள். பணியாளர்கள் அலைச்சல் அடைவார்கள். வியாபாரம் முட்டுக்கட்டை அடையும். கலைஞர்கள் சோகம் அடைவார்கள். மாணவர்கள் நன்மை அடைவார்கள். விவசாயத்தில் இரட்டிப்பு வருவாய் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும் – rasi-palangal june-06 to june-12.
– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு)