சொந்த வீட்டில் விருந்தாளி
சொந்த வீட்டில் என் உரிமைக்கு (உவமைக்கு)
நான் கொடுத்த உருவம் (உருவகம்) தான் விருந்தாளி.
பூமியில் பிறந்த வேற்று கிரக வாசி போல
விருப்பமில்லாமல் வீட்டில் பதியும்
என் கால் தடங்கல்.
இல்லம் செல்ல விரும்பாத பல நேரங்களில்
உறவினரின் கேள்விகளை பதிலாக்கி
நான் வரைந்த பொய் ஓவியம்
தான் “அலுவலகத்தில் வேலைப்பளு”.
உறவுகளின் இழிச்சொல்லை
மறுக்கவே, இல்லம் பிரவேசிக்கும்
சில நேரம் கூட, சொந்த வீட்டிலே
எனைப் பெற்ற நிஜங்கள் முன்னே
நகலாக நடிக்கிறேன்.
சொந்த வீட்டில் விருந்தாளியாக ! !.
கனத்த மனதுடன் வினாடிகள்
பயணிக்கும் போது, சில நேரம்
கற்பணையில் (அல்லது நிஜத்தில்) நண்பர்களின்
அரவனைப்பில் தலை சாய்த்துக் கொள்வேன்.
எத்தனையோ உறவுகள் தராத
சுகம் காண்பேன் அதில்.
கண்களை அனைத்துக் கொள்ள
துடிக்கும் உறக்கத்தின் அசைகள்
விடியும் வரை தான், அது போல
சில மணிகளில் மறைந்து போகும்
சொந்த வீட்டிலே விருந்தாளியாக
வாழும் வாழ்க்கை கூட.
பெற்றோரின் வேலைப் பளு / அலச்சியம் / பாங்கற்ற வாழ்க்கை போன்ற காரணங்களால் பல இல்லங்களில் சிலருக்கு அரங்கேறும் இந்த வாழ்க்கை நிகழ்வுகள்.
sondha veettil virunthaali
கண்களை அனைத்துக் கொள்ள
துடிக்கும் உறக்கத்தின் அசைகள்
விடியும் வரை தான், அது போல
சில மணிகளில் மறைந்து போகும்
சொந்த வீட்டிலே விருந்தாளியாக
வாழும் வாழ்க்கை கூட.
Super