தாய் புரிந்து கொள்ளாத நேரங்களில்
என் அம்மா சில நேரங்களில் நான் செய்த தவறுகளுக்கு காரணம் கேட்காமல் என்னை புரிந்து கொள்ளாமல் கோபித்துக் கொள்ளும் போது…என்னில் உதிக்கும் வரிகள்…
(யார் என்னை புரிந்து கொள்ளாவிட்டாலும் கவலை இல்லை நீ மட்டும் என் மனதின் அகராதியாய் இரு தாயே ! ) thaai purinthu kollaatha nerangalil
கோபத்திலும் அதிகரிக்கும் உன் பாசம்
தாயே என்னை நீ புரிந்துகொள்ளாத
நேரங்களில் ,
என் வாழ்க்கையின் அர்த்தங்களை உள்ளடக்கிய
அகராதியின் பக்கங்களை
கிழித்துக் கொண்டே வருவேன்.
ஒரு நாள் அந்த அகராதியின் அட்டைப்பக்கம்
மட்டும் என்னுடன் கல்லறையில்
மண்ணுக்கு இரையாக.
என் பிரவேசம் நரகம் என்றாலும்
சொர்க்கம் என்றாலும் நீ முதலாய்
காத்திருப்பாய் என்பதை யோசிக்காமல்
எழுதிய வரிகள்.
கண்கள் தழுவிய உறக்கத்திலும்,
களவு போகாத நினைவுகளில் கூட
என்னை திரையிட்டு பார்க்கவே
நினைக்கும் உன் மனம்.
கண்கள் தழுவிய உறக்கத்திலும்,
களவு போகாத நினைவுகளில் கூட
என்னை திரையிட்டு பார்க்கவே
நினைக்கும் உன் மனம் ..
….true. very nice.
நண்பா உன் கவிதையால் என்னை மறந்தேன். உனக்கு வாக்களித்தேன்
நன்றி
Someone is Special
I hope you will like this, I love her.. but I hate..
All the best !
Someone is Special