வன்கொடுமைக்கு உட்பட்ட வளின் பிராது

ஆரணியைச்சேர்ந்த ஆசிரியை திருமதி பவித்ரா நந்தகுமார் எழுதிய “வன்கொடுமைக்கு உட்பட்ட வளின் பிராது” – vankodumaiku utpatavalin pirathu


பட்டுக்கும் உணவுக்கு முக்கியமான நெல்லுக்கும் பெயர் பெற்ற ஆரணியைச்சேர்ந்த திருமதி பவித்ரா நந்தகுமார் அவர்கள் எழுதிய” வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது 17 சிறுகதைகள் கொண்டது ‌.ஒவ்வொரு கதையும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட கதை. இரண்டு சிறுகதை கள் பற்றிய விமர்சனம்.

1) முதல் கதையான மைசூர் எக்ஸ்பிரஸின் மூன்றாவது கம்பார்ட்மெண்ட்” இரண்டு பள்ளி மாணவிகள் பற்றிய சிறு கதை.ஞானாம்பிகை மற்றும் மிருணாளினி இரண்டு பேரும் இணைபிரியா தோழிகள்.மிருணாளினி யாரோ ஒருவருடன் ஓடிப் போக பழி முழுவதும் ஞானாம்பிகை தலையில் விழுந்தது. ஞானாம்பிகை ஒரு நாள் மாவு மிஷன் போகும் போது வழியில் பார்த்த மிருணாளினி யின் தாயார் கற்பகம் ஞானாம்பிகையை கற்பகம் தன் செருப்பால் அடித்தது , ஞானாம்பிகை க்கு ரொம்ப வலித்தது. அதன் பின்னர் நிறைய மாற்றங்கள் ஞானாம்பிகை க்கு திருமண மாகி மைசூர் எக்ஸ்பிரஸில் செல்லும் போது மிருணாளினி யைப் பார்த்து அவளிடம் பேசுவதை தவிர்த்தாள். ஆனால் மிருணாளினி ஞானாம்பிகை யிடம் பேசி அவள் தாயார் கற்பகத்துடன் தன் சகோதரன் வீட்டுக்கு போய் அவரைப் பார்த்து விட்டு என் ஊருக்கு போக வேண்டும் என்று சொல்ல அந்த சமயத்தில் கற்பகம் ஞானாம்பிகையை தேடி அவள் காலில் விழந்து மன்னிப்பு கேட்பதை போல் கதை முடிகிறது.

2) சாமியாடி:. இந்த கதை வருடாவருடம் நடைபெறும் கோயில் திருவிழா பற்றி சாமியாடி சொல்வது போல் இருக்கிறது.அதாவது வருடாவருடம் சொல்லும் சாமியாடி மூப்பு எய்திய சாமியாடி யின் மகன் .ஊர் பெரிய தனக்காரர் தன் செல்வாக்கை பறை சாற்ற மிகப் பெரிய அளவில் நடத்த உத்தேசிக்க சாமியாடி அதை மாற்றி ஊரில் ஆற்றங்கரை ஒரம் வீடுகள் இரண்டு தெரு ,ஊர்பட்ட கழிவுகள் அதனால் குடி நீர் இல்லை மேலும் அடுத்த கிராமத்து க்கு செல்லும் ந
தண்ணீர் பிரச்சினை எனவே இந்த வருட திருவிழாவில் இதை சரி செய்ய வேண்டும் எந்த அம்மனும் ஆடம்பரத்தை விரும்புவதில்லை என்று சொல்லி அதை செய்ய வைப்பது போல் கதை வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட கதை.ஆக 17 கதைகளும் வாசிக்க ஏற்றது என்பது சந்தேகமில்லை.மணிமேகலை பிரசுரம் வெளியீடு – vankodumaiku utpatavalin pirathu.
– பாரதிராஜன்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *