கவிதை தொகுப்பு 71

கடைசி ரயில் பெட்டி

அதிகாலை சூரியன் வரும் முன்னும்..

அந்திவானம் சாய்ந்த பின்னும்..
ஆகாயம் கடந்த ஒரு ‘குரல்’.
வேறு யாருமில்லை, குயில் ஓசை ஒத்த என் அழகிய “ரயில் “.
நான் வருகிறேன், நீயும் வா என்ற
‘மின்னல் ஒளி’.
 ‘நுரையீரலுடன்’ ஒரு உரையாடல் போல, அடேய்! தினமும் ஓடு என்றால் கேட்கிறாயா?
 மெதுவாக ஓடுடா..
 என் உயிர் மேலும் கீழும் ஆக ஊசலாடுகிறது..
 சற்று பொறுத்துக்கொள் வந்து விட்டோம் என்று ‘மூளையின் ஆறுதல்’ ..
 இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை ஏதாவது சொல்வதற்கு மட்டும் தான் நீ என்றது நுரையீரல்..
 சற்று மௌனமாக இருங்கள் என்று ‘கண்கள்’ நீங்கள் பேசுவதில் தலையில் வலி, ஏற்பட்டு எனக்கு வலி தோன்றுகிறது..
 அப்பாடா! வந்துவிட்டோம் என்று கால்கள் சொல்ல, கைகள் மிகவும் தாகம் என்றது..
 நீர் அருந்த நின்றவன், மீண்டும் ஓட ஆரம்பித்தான்..
 ரயில் பெட்டிக்கு அருகில் சென்றான், எந்த சலனமும் இன்றி அமைதியாக இருந்த பெட்டியை தொட்டுப் பார்த்தான்.
 உனக்காகத்தான் இத்தனை வேகம் என்றான்..
 பெட்டிகளை அடுக்கியவன்..
 சற்று தொலைவில் மாங்கனியை பார்த்தான், சுவைக்க விரும்பினான்..
 முன்னேறி செல்ல தடுக்கி கீழே விழுந்தான்..
 எழுந்தவுடன் கண்கள் ‘சரியில்லை போலும்’ என்றான் ஒருவன்..
அவனை கடந்தான்..
 மாங்கனியில் அவன் கை வைக்க ஒன்று எல்லாம் தர முடியாது.. எத்தனை வேண்டும்? என்றான்..
 இவன் மீண்டும் ஒன்று என்றான்..
 இப்போது தானே கூறினேன் ஒன்று இல்லை என்று..
 இல்லை எனக்கு ஒன்று தான் வேண்டும் என்றான்..
 மாங்கனி வைத்துவிட்டு செல் என்றான்..
 சோகமாய் நின்றவன் புறப்படும் ரயிலை கவனிக்கவில்லை..
 யாரோ ஒருவன் மோதியதும் என் ரயில் என்று ஓடினான், ரயில் கடந்து விட்டது..
 ஒருவன் உதவி செய்தான், தவற விட்டான்..
 மீண்டும் முயற்சித்தான், பிடித்து விட்டான்..
 ‘ கடைசி ரயில் பெட்டி’ சற்று சோகமாக அங்கு அமர்ந்தான்..
ஆச்சரியம்! அவனை சுற்றி மாங்கனிகள்.. அளவில்லா மகிழ்ச்சி ‘ஒன்று இல்லை என்ற வருத்தம்’ இங்கு மூட்டைகள்..
 பிறகு அதனை சுவைத்துக் கொண்டே சுகமான பயணம் இது என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்..
 
 – சௌந்தர்ய தமிழ்

You may also like...