உருளைக்கிழங்கு போண்டா சிற்றுண்டி

சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை போண்டா, பஜ்ஜியை  பிடிக்காதவர்களே இல்லை எனலாம். மாலை நேர சிற்றுண்டியாக பலருக்கும் விருப்பமான ஒன்று அதுவும் உருளைக்கிழங்கு போண்டா என்றால்  ஒரு பிடி பிடிப்பார்கள். சுவையான உருளைக்கிழங்கு போண்டா சூப்பராக எவ்வாறு செய்வதென்று பார்ப்போம் potato bonda evening special.

தேவையாவை:

கடலை மாவு  – அரை கப்,
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.
பெருஞ்சீரகம் – சிறிதளவு

மசாலா செய்வதற்கு :

உருளைக்கிழங்கு – 150 கிராம்,
கேரட் – 1,
உப்பு – தேவைக்கேற்ப,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – தலா 2,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

potato bonda evening special

செய்முறை:

*  உருளைக்கிழங்குடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து ஒன்றும் பாதியாக மசித்து வைக்கவும் potato bonda evening special.

*  கேரட்டை துருவிக்கொள்ளவும்.

*  வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

*  கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின் கேரட் துருவல் சேர்த்துக் கிளறி, மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வதக்கவும்.

*  கடைசியாக கொத்தமல்லி சேர்த்து, ஆறியதும் பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

*  கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாகக் பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

*  மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடனாதும் செய்து வைத்த உருண்டைகளை, இந்த மாவில் பிரட்டி சூடான  எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

*  தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் பரிமாற அசத்தலாக இருக்கும்.​

potato bonda evening special

You may also like...