மின்னலை தாங்கி உயிர்களை காக்கும் மரங்கள்
மரங்கள் நாம் வாழ பலப்பல வழிகளிலும் நமக்கு உதவுகிறது. உயிர் மூச்சுக்காற்றில் தொடங்கி, உணவு, உடை , இருப்பிடம் வரை எல்லாமும் தருகிறது. பல நேரங்களில் இயற்கை அழிவிலிருந்தும் நம்மை காக்கிறது trees saves human life from thunder.
இடிமின்னலானது ஏதாவதொரு பொருட்கள் மூலம் புவியில் கடத்துகின்றது. சில நேரங்களில் உங்கள் வீடுகளுக்கு அருகில் மரங்கள் இல்லையெனில் வீட்டை நேரடியாக தாக்கலாம். எனவே வீடுகளுக்கு அருகில் உயரமான மரங்களை வளர்க்கவேண்டும். இதன்மூலம் மின்னல் தாக்கமானது மரத்தினூடாகக் கடத்தப்பட்டு நமது வீட்டிற்குரிய பாதிப்பு தடுக்கப்படுகின்றது.
உயர்ந்த கட்டங்களில் இடிதாங்கியை அமைத்தல் வேண்டும். இதன் மூலம் இடிதாங்கிகள் மின்னல் தாக்கத்தை அயற்புறத்திற்கு விடாது தாம் தாங்கிப் புவிக்குக் கடத்துவலதுடன், அதனால் கட்டடங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுத்தும் விடுகின்றன.
உயிர்களை காக்கும் மரங்கள்
இடிமின்னல் வேளைகளில் திறந்த வெளிகளில் நிற்பதையோ அல்லது விளையாடுவதையோ அல்லது வயல்களில் வேலைசெய்துகொண்டிருப்பதையோ தவிர்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் அந்தப் பரந்த வெளியில் உயர்ந்த பொருளாக நீங்களே இருக்கும்போது நேரடியாக மின்னல் தாக்கலாம்.
சந்தர்ப்பவசத்தால் வெட்டவெளியில் இருக்கநேர்ந்தால் மின்னலின்போது தரையில் படுத்துவிடாதீர்கள். தரைக்கும் உடலுக்குமான தொடர்பினை இயலுமானளவில் குறைத்துக்கொள்ளக்கூடிய வகையில் குந்தி அமருங்கள் . இதனால் ஓரளவேனும் மின்னல் தாக்கத்தின் பாதிப்பை குறைக்கலாம்.
இடிமின்னல் வேளைகளில் தொலைபேசிக் கோபுரங்கள், உலோகக் கொடிக்கம்பங்கள் , திறந்த ஒதுக்கிடங்கள் அருகாமையில் நிற்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். உயரமான மரங்களுக்கு கீழ் ஒதுங்குவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் மரங்களை நோக்கி விரைவாக மின்னல் கடத்தப்படக்கூடியது .
மூடப்படாத வாகனங்களில் இடிமின்னல் காலங்களின்போது செல்வதைத் தவிர்க்கவேண்டும். குறிப்பாக மோட்டார் வண்டி போன்றவற்றிலோ அல்லது உழவு இயந்திரங்களிலோ செல்வதைத் தவிர்க்கவேண்டும்.
வீட்டிலுள்ள மின்தொடர்புகள், அண்டனா தொடர்புகளைத் துண்டித்தல் வேண்டும். தொலைக்காட்சிகள், கணினிகள், மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் என்பவற்றை மின் இணைப்பிலிருந்து துண்டிக்கவேண்டும். இல்லையெனில் அவை உயர் மின்சார தாக்கத்தினால் பழுதடைந்துவிடும்.
தொலைக்காட்சி மற்றும் நிலத்தொலைபேசிகளுக்குரிய அண்டனாக்களின் தொடர்பையும் துண்டித்தல் வேண்டும். மேலும் எந்தவிதமான மின் பொருட்களை அழுத்தும் செயற்பாடுகளையோ அல்லது மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதையோ தவிர்க்கவேண்டும்.