சுவையான சாம்பார்ருக்கு பயனுள்ள குறிப்புகள்
சாம்பார் செய்வதற்கு துவரம்பருப்பையும்,பாசி பருப்புபையும் சமஅளவில் சேர்த்தால் சாம்பார் ருசி நன்றாக இருக்கும் paruppu sambar recipe tips.
முடிந்தவரை சாம்பாரில் சின்ன வெங்காயம் சேர்த்தால் ருசி பிரமாதமாய் இருக்கும்.
புளியை குறைத்து, தக்காளியை அதிகமாக சேர்த்தாலும், புளிக்கு பதில் தக்காளி மட்டும் சேர்த்தாலும் தனி ருசி கிடைக்கும் .
சாம்பாரில் தூள் பெருங்காயதிற்கு பதில் கட்டி பெருங்காயம் போட்டு தாளித்தால் சாம்பார் வாசனையாக கம கமவென இருக்கும்.
வெங்காயம், தக்காளி வதக்கும் போது பச்சை மிளகாயையும், அரிந்துபோட்டு வதக்கி சாம்பார் செய்தால் தனி ருசி கிடைக்கும் .
சாம்பார் செய்வதற்கு ஒரே வகை காயை மட்டும் பயன்படுத்தாமல் எல்லா காய்களிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து சாம்பார் செய்யும் போது கலர்புல்லாக அதே நேரத்தில் சுவையாகவும் இருக்கும். (கேரட், முருங்கைகாய் , அவரை)
அதிக நேரம் குழம்பை கொதிக்க வைக்காமல், காய்கறிகள் வெந்து, மசாலாக்கள் பச்சை வாடை நன்றாக போனால் போதுமே.
சாம்பாரில், மேம்பொடியோடு தேங்காய் அரைத்து சேர்த்தால் ருசியாக இருக்கும்.
சாம்பார் மிகவும் தண்ணியாக போய்விட்டால் சிறிது பொட்டுகடலை மாவை கரைத்து சாம்பாரில் விட்டு சற்று கொதிக்கவைத்தால் சாம்பார் கெட்டியாகிவிடும்.
முக்கியமான விஷயம் சாம்பார் இறக்கும் போதுதான், கொத்தமல்லி தழை போடவேண்டும் அப்போதுதான் அதன் ருசி மாறாமல் இருக்கும்.
சாம்பார் மேம்பொடி என்று கேள்வி பட்டு இருப்பீர்கள். அதை செய்யும் முறை என்னவென்றல், சிவப்பு மிளகாய், கடலை பருப்பு, தனியா இவை மூன்றையும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து பொடி செய்து வைத்து இருந்தால் சாம்பார் செய்யும் போதெல்லாம், சிறிது மேம்பொடி போட்டு, ஒரு கொதியில் இறக்கினால் சாம்பாரின் ருசியோ தனிதான்.