ரிப்பன் பக்கோடா செய்முறை

சுவையும் மணமும் நிறந்த ரிப்பன் பக்கோடா செய்வதுஎளிது.சுவையோ நாக்கில் நர்த்தனமாடும். – ribbon pakoda

ribbon pakoda

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – 1kg
பொட்டுக்கடலை- 400gms
உரித்த பூண்டு – 40 பல்
மிளகாய்த்தூள் – 6tsp
வெண்ணெய் – 80gms
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

இட்லி அரிசியை நன்றாக துடைத்து மெஷினில் கொடுத்து மாவாக அரைக்கவும்.பொட்டுக்கடலையை மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும்.பூண்டை மிக்ஸியில் நீருடன் மழமழன்னு அரைத்து வடிக்கட்டவும்.(சின்னதா பூண்டு அரைப்படாம இருந்தா ரிப்பன் பக்கோடா பிழியும் போது அடைக்கும்) ஓரு தாம்பூலத்தட்டில் அரிசிமாவு, பொட்டுக்கடலை பவுடர், வடிக்கட்டிய பூண்டு, வெண்ணெய், மிளகாய்த்தூள், உப்பு தேவைக்கு சேர்த்து கலந்துவிடவும். இதில் தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசையவும் – ribbon pakoda .

ஓரு கடாயில் பொரிக்க தேவையான எண்ணெய்யை காயவிடவும்.ரிப்பன் பகோடா அச்சு உள்ள குழாயில் மாவை நிரப்பிக் காய்ந்த எண்ணெய் -யில் சுற்றி சுற்றி வட்டமாக பிழியவும் ஒருபுறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பிவிடவும். மறுபுறமும் சிவந்ததும் ஒரு வடித்தட்டில் எடுத்து வைக்கவும். ஆறினவுடன் காற்று புகாத டப்பாவில் போட்டு மூடவும். எல்லா மாவையும் பிழிந்து எடுத்தால் பொன்னை வார்த்தது போல மொறுமொறு ரிப்பன் பக்கோடா ரெடி.

– ஜோதிபாய்

You may also like...