அசைவம் சைவமான சம்பவம்

இது ஒரு ஆத்மார்த்தமான அனுபவம். எனக்கு குரு வழிபாடு மிகவும் பிடித்தமான ஒன்று. காலையில் எழும்போதே குரு வாழ்த்து சொல்லி, அந்த நாளை தொடங்கும் பழக்கமுண்டு. எல்லா வியாழக்கிழமையும் சித்தர்கள் அல்லது மகான்களின் கோவிலுக்கு செல்வது வழக்கமுண்டு. நான் சிறுவயதிலிருந்து அசைவ உணவு சாப்பிடும் பழக்கமுள்ளவன். குருவழிபாடு செய்ய ஆரம்பித்த பிறகு வியாழக்கிழமைகளில் அசைவ உணவை மிகவும் உறுதியுடன் தவிர்த்து வந்தேன். சொல்ல போனால் குரு வழிபாடு எனக்கு அசைவ உணவு மீதான விருப்பத்தை நாளுக்குநாள் சீராக குறைந்து கொண்டே வருகிறது. ஒரு கட்டத்தில் முற்றிலும் தவிர்க்கும் வல்லமை பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது – maha periyava anugraham.

சமீபத்தில் நான் வெளியூர் பயணம் சென்ற போது தவிர்க்க முடியாத சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு வியாழனன்று மதிய உணவிற்கு அசைவம் சாப்பிட வேண்டியதாயிற்று. மனம் ஒரு பக்கம் சூழ்நிலையாலும் மறுபக்கம் பக்தியாலும் இழுக்கப்பட்டு அலைகழிக்கப்பட்டது. வேறு வழியின்றி சாப்பிட்டுவிட்டேன். அந்த நாள் முழுக்க என் உடம்பு ஒரு ஒவ்வாமையை உணர்ந்தது. மனம் நிம்மதியின்றி செய்யக்கூடாத ஒன்றை செய்த சோகம் ஆட்க்கொண்டது. என் நண்பரிடம் தொலைபேசியில் அழைத்து என் புரியாத குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தினேன். அதே நாள் இரவு எனக்கு whatsapp மூலம் ஒரு பதிவு வந்தது. அப்பதிவை கீழே கொடுத்துள்ளேன். நான் அடிதொழுந்து வணங்கும் மகா பெரியவரை பற்றிய பதிவு. அது எனக்கு புத்தி புகட்ட குற்றத்தை எடுத்து கூற வந்ததிருந்தது.


அசைவம் சைவமான சம்பவம்

ஒரு சிவ வழிபாட்டுக் குடும்பம். ஆனால், சைவ உணவு மட்டும்தான், என்ற கட்டுப்பாடு இல்லை. பண்டிகைக் காலங்களில் அசைவ உணவும் உண்டு.

மகனுக்குக் கல்யாணம் ஆயிற்று; ஏராளமான பரிசுப் பொருள்கள் வந்தன. விருந்து – மறு விருந்து என்று ஏக தடபுடல். பெண்ணைக் கொடுத்த சம்பந்திக் குடும்பத்தினருக்கு, விருந்து ஒருநாள் – maha periyava anugraham.

சைவச் சமையல்!

சம்பந்திக்கு கொஞ்சம் திடுக்கிட்டது. அவருடைய வீட்டில் அவ்வப்போது அசைவம் உண்டு. பெண்ணும் அப்படியே வளர்ந்தவள். இந்த வீட்டில் அசைவமே இல்லையென்றால், பெண் ஏங்கிப் போய்விடுவாளே.. கல்யாணத்துக்கு முன் பேசிய பேச்சுக்களில், இங்கே அசைவம் உண்டு என்ற மாதிரிதானே பேச்சு வந்தது.

“என்ன சம்பந்தி…. சாப்பாட்டிலே ஸ்பெஷல் அயிட்டமே இல்லை?” என்று கேட்டேவிட்டார்.

சம்பந்தி பதில் சொன்னார்;

“முன்னேயெல்லாம் நீங்க கேட்கிற அயிட்டம் இருந்தது. இப்போ கல்யாணத்திலே ஒரு சிநேகிதர், காஞ்சிப் பெரியவா படம் … அழகா சட்டம் போட்டு ப்ரெஸண்ட் பண்ணிட்டார். அதோ மாட்டியிருக்கேன் பாருங்க, அவங்க பார்த்துக் கொண்டிருக்கும் போது நாம எப்படிங்க, அதெல்லாம் சாப்பிடறது? அதனாலே நிறுத்திட்டேன்…”

பக்தி….பக்தி…இதுதான்!

சுவாமிகள் படமாக இல்லை; பிரத்யட்சமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்….

கண்ணப்பன்கள் இன்றைக்கும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
— சம்பவம் தொகுப்பு – கோதண்டராம சர்மா, தட்டச்சு வரகூரான் நாராயணன்.


இச்சம்பவத்தை படித்தவுடன் மனதில் ஆணி அடித்தாற்போல் நிஜ குரு பக்தி பற்றி விளங்கியது. இந்த அனுபவம் சிலருக்கு பக்தி பாடத்தை அளிக்குமென நம்புகிறேன். பெரியவா சரணம்.

– குரு பக்தன்

You may also like...

1 Response

  1. Boomadevi says:

    அருமை.குருவே சரணம்