உலக கவிதை தின சிறப்பு கவிதை

அவளின் கவிஞன்

எனது ஆழ்ந்த உறக்கங்களுக்கு
அமைதி நீரோடையில்
இசையாகிறாள் என்னவள் – kavithai thinam 2020.

நிசப்தங்களில் தொலைந்து நிஜங்களில்
வரிகளாகும் என்னைப்போல
கவிஞனுக்கு இதோ இவ்வரிகள்.

ulaga kavithai thinam

எப்போதும் கற்பனைப் பாத்திரத்திற்க்கே
வலிமை அதிகம் (வாசகர் மத்தியில்)
பாவம் கவிஞன் (ஆகிய நான்) என்ன செய்வா(வே)ன்?

ரீங்கார வண்டுக்கும், கற்பனைக் கவிஞனுக்கும்
தேனை விட மலரின் மனம் தானே
நீடித்த பாதையாய்! பயணமாய்.!

நிழலுடன் மோதி மோதி
நிஜத்தை தொலைக்கும் பேதை போல,
வார்தைகளுடன் மோதி படைப்புகளை
காற்றில் தொலைக்கிறான்!
கரைக்கிறான்! தன் தமிழச்சிக்காக!

உளவியல் சொல்லும் உலகம் உன்னை
திரும்பிப் பார்க்காது என,
என்னவள் பார்வைத்திரையில்
என் எழுத்துக்களின் பிம்பம் விழுந்தால்
போதுமென்ற போராட்டத்தில் !

வெள்ளை ரோசாவுக்கும் மஞ்சள்
வண்ணம் தீட்டிப் பார்க்கும்
இவன் எழுத்துப்போர்.

பரவசத்தேடலில் பார்த்த
இடமெல்லாம் எழுத்துக்கள்
நடனம் அரங்கேறும்.

பல சமயம் உன் புருவங்கள்,
சில சமயம் உன் உதடுகள்
இசைத்த உன் வார்தைகளோடு
தொடரும் பயணத்தில் இந்த..,

– நீரோடை மகேஷ்


கவிதை மேடை “வர்ண ஜாலம்!”

வாழ்க்கையே ஒரு கர்ணம்….
போடும் விளையாட்டு!
இதில் ………….. – kavithai thinam 2020
ஜாலங்கள் செய்தால்
ஞாலம் உன்னை தூற்றும்!
வர்ணஜால பேச்சு உன்னை
உயர்த்திக் காட்டினாலும்
அது வாழ்க்கையில் சிறந்ததல்லவே!
வெள்ளை மனசுடன் பழகு
கொள்ளை போகும் உறவினரிடம்
உன் மனசு…………
கருப்பை நிராகரித்து
வெறுப்பை பெற்றுக் கொள்ளாதே!
நீலம் அது உனக்கு
அகிலத்தினைக் காட்டும் உன்னத வர்ணம்!
சிவப்பு தேடித்தேடி பார்
உவப்பு மிக்க சிறந்த வர்ணம்!
பச்சை உன் கண்ணுக்கு பசுமையானதை
இச்சை என்ற உற்சாகமளிக்கும்
அற்புத வர்ணம்……….! – kavithai thinam 2020
வர்ணங்களை ரசித்து
வர்ணஜாலங்களை விட்டொழித்து
மகிழ்ச்சியாக வாழ்!

– உஷாமுத்துராமன், திருநகர்

You may also like...