கொரோனா எச்சரிக்கை – 1

கவிதை 1 – சுத்தம் நித்தம் தேவை!

சப்தம் இன்றி வந்த கரோனாவே!
நிசப்தத்தை தின்று தீர்க்க நினைத்தாயோ!
ஒளியை விழுங்கி உலகை இருட்டாக்கிய கரோனாவே..
வந்த வழியே நீ திரும்பி ஓடிவிடு! – corona kavithai

korona kavithai 1

எங்களுக்கு சுத்தம் நித்தம் தேவை என
உணர வைத்த கரோனாவே……
உணர்ந்தோம்….. எங்கள் குடும்பங்களுடன்
சேர்ந்து ஐக்கியமாகி விட்டோம்!
நீ அமர வேண்டாம் எங்கள் நாட்டில்
தளராமல் ஓடிவிடு.
தட்டி தட்டி உன்னை எட்டி உதைத்தாலும்
முட்டி முட்டி எங்கள் நாட்டை
வெட்டி விடாதே…

– உஷாமுத்துராமன், திருநகர்


கவிதை 2 – சென்றுவிட்டு கொரோனா

காரணம் என்ன! காரணம் என்ன!
நீ வந்ததன் நோக்கம் என்ன!
இந்தப் பூ உலகுக்கு நீ சொல்வது என்ன
எடுத்துச் சொல்ல நினைப்பது என்ன
விதைத்து செல்ல நினைப்பது என்ன
உன்னால் ஏற்பட்ட
உயிர் இழப்புகள்
பல்லாயிரம் பல கோடி
ஆனால்
எவராலும் ஏற்படுத்த முடியாத ஒரு செயலை நீ செய்தாய்
ஒற்றுமை
உன்னால் என் தாய்நாடு என்று ஒற்றுமையாய்!
பறவைகள், மிருகங்கள், இயற்கை வளங்கள் யாவும்,
மாசற்ற காற்றை சுவாசிக்கின்றன.
போதும் சென்றுவிடு – corona kavithai

korona kavithai 2

நீ வந்த காரணத்தை நாங்கள் உணர்ந்தோம்
எங்களை மன்னித்து சென்றுவிடு இல்லையெனில்
உன்னால் இறப்புகள் பல ஆயிரம் என்றால்
உணவின்றி இறப்புகள் பல கோடி ஆகலாம்,
அதனால்
சென்றுவிடு
மன்னித்து சென்றுவிடு!

– துர்க்கா தேவி கோவை


கவிதை இரண்டாம் பாகம்

You may also like...