கச்சாயம் (உடனடி அதிரசம்) செய்முறை
தேவையான பொருட்கள்
250 கிராம் மைதா மாவு
200 கிராம் சர்க்கரை
வெள்ளை ரவை – 50 அல்லது 100 கிராம்
ஏலக்காய் 8 துண்டுகள் – kachayam seimurai
செய்முறை
வெள்ளை ரவை மற்றும் சர்க்கரை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும், ஊற வைத்ததை நன்றாக கரைத்து அதனுடன் மைதா மாவை கலக்கவும், சிறிது நேரம் கலக்கிய பின்னர், ஏலக்காய் கலந்து 5 நிமிடம் வைத்து பின்னர் ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு சிவக்க ஆரம்பிக்கும் பொழுது எடுத்து பரிமாறலாம்.
வலையொளி (YouTube) காணொளி
இந்த செய்முறை விளக்கத்தை காணொளியில் (YouTube Video) கண்டு ரசிக்க – https://youtu.be/cmNK2zRx-VE
கூடுதல் குறிப்பு
கரைக்கும் போது வாழைப்பழம் அல்லது தேங்காய் துருவல் சேர்த்து கரைத்தால் மேலும் சுவையாக இருக்கும். இவ்வாறு செய்கையில் அடுத்தநாள் வைத்து சாப்பிட முடியாது. அன்றே அதை சாப்பிடுதல் நல்லது – kachayam seimurai.
உடல் நலக்குறிப்பு (மேலும் ஒரு இனிப்பு வகை செய்முறை)
மைதா மற்றும் வெள்ளை சர்க்கரை தினசரி பயன்பாட்டிற்கு (உடலுக்கு) நல்லது அல்ல. ஆகவே மைதாவிற்கு பதிலாக கோதுமையை ஆட்டி அல்லது அரைத்து செய்யலாம். அவ்வாறு செய்கையில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
மேலே உள்ள பதிவிற்கு இணையான ஆரோக்கியமான பதிவாக தயாரிக்கப்பட்டது. செய்வதற்கு இலகுவாக சிலர் மைதா பயன்படுத்துவார்கள் அவர்களுக்கு மேலே உள்ள இந்த பதிவு பதிவிடப்பட்டது. சிலருக்கு கோதுமையில் ஆரோக்கியமாக செய்து ருசிக்க ஆசை அவர்களுக்கு கீழே உள்ள பதிவு https://youtu.be/LA2eZQ8JhMM