சுவையான பூந்தி லட்டு செய்முறை
பொதுவாக தமிழர்களின் பெரும்பாலான விழாக்களில் லட்டு இடம்பெறாமல் இருக்காது. அதிலும் பூந்தி லட்டு செய்வதும் சுலபம், அனைவரையும் கவர்ந்தது – boondi laddu.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 500 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
முந்திரி – தேவையான அளவு (அல்லது 20 துண்டுகள்)
திராட்சை – தேவையான அளவு
ஏலக்காய் – தேவையான அளவு (அல்லது பத்து துண்டுகள்)
நெய் – 150 கிராம்
செய்முறை
- கடலை மாவில் தண்ணீர் கலந்து நன்றாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 400 கிராம் சர்க்கரையை 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக சர்க்கரைப்பாகு தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் – boondi laddu.
- கரைத்து வைத்த கடலை மாவை சல்லடை கரண்டியில் பூந்தி தேய்த்து பொரித்து எடுக்கவேண்டும் சிறிது ஆறியவுடன் அதை இரண்டு மூன்று துண்டுகளாக லேசாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- முந்திரி திராட்சை ஏலக்காய் மூன்றையும் நெய்யில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
- சர்க்கரை பாகை ஊற்றி நன்றாக கலக்கவேண்டும்.
- பொரித்து வைத்த முந்திரி திராட்சை ஏலக்காய் மூன்றையும் நெய்யுடன் அப்படியே ஊற்றிக் கலக்க தொடங்கவேண்டும்.
- முதல் முறை லட்டு பிடிப்பவர்களுக்கு பக்குவம் தெரியவில்லை என்றால் கலக்கிக் கொண்டிருக்கும் பொழுது ஓரிரு லட்டுகள் பிடித்து வைத்து ஒரு நிமிடம் காத்திருந்தாலே தெரிந்துவிடும்.
- திராட்சை அல்லது முந்திரி அதிகமாக சேர்ப்பதன் மூலம் ஒவ்வொரு உருண்டையின் மேற்பரப்பிலும் திராட்சை அல்லது முந்திரி தெரிந்தால் அந்த லட்டு பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் நன்றாக இருக்கும்.
– நன்றி நீரோடை குடும்பம்
வலையொளி (YouTube) காணொளி
இந்த செய்முறை விளக்கத்தை காணொளியில் (YouTube Video) கண்டு ரசிக்க – https://youtu.be/lTexRvmlXZA
Good, விளக்கம் நன்றாக இருக்கிறது
மிக அருமை
மிகத் தெளிவான விளக்கம் . செய்முறைக் குறிப்புகள்படிச் செய்தால் எல்லோரும் நன்றாகச் செய்யலாம். அவ்வளவு விளக்கமான வழிமுறைகள். பாராட்டுக்கள்!!