இதுவும் வேலைதான் – சிறுகதை
வேலு தன் இரண்டு சக்கர வாகனத்தில் எல்லா பிளாஸ்டிக் பொருள்களையும் கட்டிக் கொண்டு கிளப்பினான். அப்பொழுது எதிரே வந்த பரிமளா அக்கா, “என்ன தம்பி வேலு கிளம்பியாச்சா? என்று அவனை பார்த்து கேட்டாள் – tamil short story.
“ஆமாம். அக்கா வெயிலுக்கு முன்னாலே போனால்தான் வியாபாரத்தை பார்க்க முடியும்?” என்று சொன்னான்.
“ஆமாம் நீ சொல்றதும் சரிதான்? பாவம் உங்க அப்பா உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தாங்க?” என்று சொன்னாள்.
“ஆமாம் சரி அக்கா நான் வரேன்” என்று சொல்லி வண்டியை கிளப்பினான்.
அந்த சிறிய கிராமத்தில் அனைவரும் நட்புடனும் அன்புடன் பழகுவர். ஒருவருக்கு ஏதேனும் துக்கம் என்றால் ஊரே திரண்டு வந்து உதவும். அப்படிப்பட்ட கிராமத்தில் அன்புக்கு ஏது பஞ்சம்.
அவன் சிறுது தூரம் போக பரிமளா நடக்க எதிரே சுமதி வந்தாள்.
“என்ன பரிமளா எப்படி இருக்கே?” என்ற சுமதி கேட்டாள்
‘நல்ல இருக்கேன். நீ எப்படி இருக்கே” என்று ஒருவரை ஒருவர் பல செய்திகளை பேசிக் கொண்டே இருக்கும் பொழுது “ஆமாம் இந்த வேலு பையன் நல்ல படித்து விட்டு ஏன் இந்த வேலைக்கு போகிறான்” என்று சுமதி கேட்டாள்.
அறிவை வளர்த்து கொள்ளத்தான் படித்தேன்
“நானும் கேட்டேன் சுமதி அதற்கு அவன் அக்கா இப்பொழுது வேலை கிடைப்பதே ரொம்ப கஷ்டமா இருக்கு. அப்படியே நான் பட்டணத்தில் போய் வேலை தேடினாலும் நான் படித்திருக்கும் பி.ஏ. படிப்பிற்கு என்ன வேலை கிடைக்கும். இன்ஜினிரிங் படித்து மேலும் பல படிப்பு படித்தவர்களுக்கு வேலை கிடைப்பது சிரமமாக இருக்கு, இதில் எனக்கு 2000 ரூபாய்க்கு கூட வேலை கிடைக்காது. இதில் நான் இந்த கிராமத்தில் இருக்கும் என் அப்பா அம்மாவிற்கு என்ன கொடுப்பேன். நான் என் அறிவை வளர்த்து கொள்ளத்தான் படித்தேன்.
நிச்சயம் என்னால் சம்பாதிக்க முடியும்
இது எங்க அப்பா செய்த தொழில் அதனால் அவருக்கு இருக்கும் அனுபவத்தை எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறார். அவருடைய அனுபவம் என்னுடைய படிப்பும் சேர்ந்தால் நிச்சயம் என்னால் சம்பாதிக்க முடியும். அதோட இதுவும் வேலைதான். இந்த வேலை செய்துதான் என் அப்பா என்ன வளர்த்தார். அதனால் நானும் அதே வேலையினை எடுத்துக் கொண்டேன்” என்று விளக்கம் சொன்னான். அவன் செய்வது உண்மைதானே.” என்று வேலு சொன்னதை சொல்லி அதிலிருக்கும் நியாயத்தை சொன்னாள் பரிமளா.
“ஆமாம் பரிமளா வேலை கிடைக்கலையே என்று ஏங்கி வேண்டாத பழக்கங்களுக்கு அடிமையாகி நேரத்தை வீணடிப்பதைவிட இந்த தம்பி செய்ததுதான் சரி – tamil short story.
சரி நான் வாறேன் வீட்டில் வேலை இருக்கு” என்று சொல்லி இருவரும் தங்கள் வீட்டை நோக்கி கிளம்பினர்.
– உஷாமுத்துராமன், திருநகர்
இன்றைய பல இளைஞர்களின் உண்மை நிலையை எடுத்து கூறுகிறது…
Nalla irukku story
“இதுவும் வேலை தான்” சிறுகதை மிக அருமை! வேலு மாதிரி எல்லா இளைஞர்களும் தங்களுக்குத் தெரிந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் இருக்காது. கதை எழுதிய உஷா முத்துராமனுக்குப் பாராட்டுக்கள்!
நேர்மையுடன் செய்யும் எந்த வேலையும் குறைவில்லாது.. நினைக்கும் வேலையைத்தான் செய்வேன் என்று நினைக்கும் இன்றைய தலைமுறைக்கு ஒரு நல்ல அறிவுரை.. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
Youngsters ku useful ah irukkum.