என் மின்மினி (கதை பாகம் – 15)
சென்ற வாரம் – பிடிச்சிருக்குனு நீயே சொல்றே. ஆனால் நமக்குள்ளே காதல் வேணாம்னு ஏன் சொல்றே… அப்படி என்ன தீர்க்கமுடியாத கவலை இருக்கு உன் மனசுல… – en minmini thodar kadhai-15.
சற்றுதூரம் நடந்துசென்றவள் மனதிற்குள் எதையோ யோசித்தபடி திரும்பி அவனை நோக்கி மீண்டும் நடந்து அவனருகில் வந்து நின்றுகொண்டு ஏன்டா என் மேலே கோபம் வந்துடுச்சா…
நான் எப்படிப்பட்ட பொண்ணு என்னோட சூழ்நிலை எல்லாம் தெரிஞ்சுகிட்டு உன்னோட காதலை என்கிட்டே சொல்லியிருந்தா சந்தோசமா உன்னோட காதலை நான் ஏத்துகிட்டு இருந்துருப்பேன்… ஆனா என்று அவள் ஆரம்பிக்கும் முன்னரே ஹே தப்புதான்… உன்கிட்டே வந்து ஐ லவ் யூ சொன்னது மிகப்பெரிய தப்புதான்… எனக்கு சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டேன்… அதுக்கு இவ்வளவு பில்டப் இப்போ எதுக்கு காட்டுறே…உன் பின்னால கெஞ்சி கெஞ்சி உன்னை லவ் பண்ண வைக்கணும்னு எதிர்ப்பாக்குறீயா என்று படபடவென பொரிந்து தள்ளினான் பிரஜின்…
அவன் பேசுவதை எல்லாம் மிகவும் பொறுமையாக கவனித்து கொண்டே லேசாக அவனை பார்த்து சிரித்தாள் ஏஞ்சலின் கிருஸ்டி…
என்ன இங்கே காமெடி படமா காட்டுறேன்.இப்படி பல்லை காட்டுறே.இப்படி சிரிச்சா ஒன்னும் என்னோட கோபம் குறைய போவதில்லை.போயி நடக்குற வேலையினை பாரு என்று எரிச்சலடைந்தான் பிரஜின்…
சரி சரி…கோபப்படாதே,மூஞ்சை தூக்கி வெச்சது போதும்.கொஞ்சம் சிரி…நான் ஒன்னும் சொல்லவே இல்லை. உன்னோட காதலை அழகா என்கிட்டே சொன்னதுக்கு முதலில் உனக்கு வெரி வெரி தேங்க்ஸ்…ஆனால் எனக்குனு யோசிக்க கொஞ்சம் நேரம் வேணும்,அது மட்டும் இல்லாது என் குடும்பத்த பத்தி நீயும் உன்னோட குடும்பத்த பத்தி நானும் தெரிஞ்சுக்கணும்…இன்னும்
எவ்வளவோ இருக்கு… எல்லாமே நான் யோசிக்கணும் என்றபடி பொறுமையாக பேசினாள் ஏஞ்சலின் கிரிஸ்டி…
அவள் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல சரி நீ யோசிச்சே சொல்லு என்றவாறு லேசாக சிரித்தான் பிரஜின்…
எப்பா இந்த முகத்துல சிரிப்பை கொண்டுவர எவ்வளவு பண்ண வேண்டியிருக்கு என்றவாறே சரி சரி நாளைக்கு என்கூட வெளியே வர முடியுமா உன்கிட்டே நிறைய பேசணும் போகலாமா??? என்றாள் ஏஞ்சலின் கிரிஸ்டி…
என்ன விஷயம் அப்படி இருக்கு.எதுவா இருந்தாலும் இப்போவே சொல்லு.நாளைக்கு எனக்கு நெறைய வேலைகள் இருக்கு அதனால என்னால முடியாது என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-15…
ஒ ஓகே…நல்லது.ஒண்ணு சொல்றே நல்ல கேட்டுக்கோ.நான் என்னைபத்தியும் என் குடும்பத்த பத்தியும் உன்கிட்டே பேசணும். அதுக்கு நாளைக்கு நீ வந்தே ஆகணும்…அதுக்கு மேலே உன்னோட விருப்பம் என்று மீண்டும் கோபத்துடன் எழுந்து விறுவிறுவென நடந்தாள் ஏஞ்சலின் கிரிஸ்டி
– அ.மு.பெருமாள்
பாகம் 16-ல் தொடரும்
கதைகளம் அட்டகாசம். வாழ்த்துகள்..
சஸ்பென்ஸ் ஆக போகுது
காதலில் அருமை ஊடல் தானே…ஊடல் தொடரட்டும்…காத்திருப்போம்…
.நான் என்னைபத்தியும் என் குடும்பத்த பத்தியும் உன்கிட்டே பேசணும். அதுக்கு நாளைக்கு நீ வந்தே ஆகணும்…அதுக்கு மேலே உன்னோட விருப்பம் என்று மீண்டும் கோபத்துடன் எழுந்து விறுவிறுவென நடந்தாள் ஏஞ்சலின் கிரிஸ்டி..
முதிர்ச்சியான அனுகுமுறை.
கதை சிறப்பாக பயணிக்க வாழ்த்துக்கள்.
அப்படி என்னதான் செல்ல போகிறலே இந்த ஏஞ்சலின் கிறிஸ்டி… அடுத்து வாரம் வரை காத்திருக்க வேண்டியதுதான்…
சஸ்பென்ஸும் தொடருது கதையைப் போலவே.