என் மின்மினி (கதை பாகம் – 17)
சென்ற வாரம் – பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக வருகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு தன் கைபேசி அழைப்பை துண்டித்தாள் ஏஞ்சலின் கிரிஸ்டி… – en minmini thodar kadhai-17.
என்னதான் கோபத்துடன் அவனது கைப்பேசி இணைப்பை துண்டித்தாலும் அவள் மனசுக்குள் அவனை நினைத்து குஷியாகத்தான் இருந்தாள்…
முதல் முறை அவனை தனிமையில் சந்திக்கும் தருணம் அல்லவா… அவள் மனசுக்குள் ஆரவாரம் இல்லாமலா போய்விடும்…
தன்னிடம் இருந்த ஒவ்வொரு ஆடைகளையும் அணிந்து தன்னைத்தானே அழகு பார்த்து கொண்டவாறே ச்சே…. இது நல்லாவே இல்லை. வேற டிரஸ் போடலாம் என்று ஆடைகளை மாற்றி மாற்றி பார்த்தவள் இறுதியாக ஒரு உடையினை தேர்வு செய்து அணிந்து கொண்டே..,நேரம் வேற ஆகுது.லேட்டா போனால் வேற திட்டி தள்ளுவான் என்றவாறே தன்னுடைய ட்ரெஸ்ஸிங்
டேபிள்ளில் ஒட்டி வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டினை எடுத்து தன் நெற்றியில் ஒட்டியவாறே ஹாஸ்டல் கேட்டினை நோக்கி வேகமாக நடந்தாள் ஏஞ்சலின் கிரிஸ்டி…
ஹாஸ்டல் கேட்டினை திறந்த வண்ணம் வெளியே வந்தவளுக்கு ஏக மகிழ்ச்சி.
வாசலில் பிரஜின் அவளுக்காக காத்துக்கொண்டிருந்தான்….
அவன் அருகில் வந்து நின்றவாறே அவனை மெதுவாக ரசித்து கொண்டிருந்தாள்.அவள் வந்ததை சரியாக கவனிக்காதவன்
தீடீரென திரும்பி…ஹே நீ வந்துட்டீயா…இன்னிக்கு செம அழகா இருக்கே நீ என்றான் பிரஜின்…
நிஜமாகவா சொல்றே…தேங்யூ வெரி மச் டா..
என்னடா இன்னிக்கு நீ ரொம்ப ஸ்மார்ட் ஆக இருக்கே.இந்த ரெட் ஷர்ட் உனக்கு ரொம்ப நல்லாயிருக்கு உனக்கும் ரெட் கலர்னா ரொம்ப பிடிக்குமா??? எனக்கும் ரொம்ப பிடிக்கும் என்றவாறே என்ன வண்டியிலே வந்திருக்கே… இது யாரோட வண்டி என்றாள் ஏஞ்சலின் கிரிஸ்டி…
ம்ம் எனக்கு ரெட் கலர் ரொம்ப பிடிக்கும்.அதை போலே ரெட் கலர் பிடிச்சவங்களையும் ரொம்ப பிடிக்கும் என்று சிரித்தபடி இது என்னோட நண்பன் வண்டிதான்.உனக்காக தான் வாங்கிட்டு வந்தேன்.ஏன் என்கூட வண்டியில் வர பிடிக்கலையா என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-17…
அட நீ வேற எனக்கு டூவீலர் பின்னாடி உக்காந்து வேடிக்கை பாத்துக்கிட்டே போறது ரொம்ப பிடிக்கும்.அதும் இல்லாம உன்கூட வருவது பிடிக்காம இருக்குமா என்றபடி சிரித்தாள் ஏஞ்சலின் கிரிஸ்டி…
அவ்வளவுதானே இன்னிக்கு முழுவதும் உன்னை உக்காரவச்சு ஊரசுத்தி காட்டுறே ஓகேவா. முதலில் காஃபி ஷாப் போகலாமா என்று அவன் கேட்க,வேண்டாம் ஜூஸ் ஷாப் போவோம் என்று இவள் சொல்ல இருவரின் பயணம் இனிதே தொடங்கியது..
– அ.மு.பெருமாள்
பாகம் 18-ல் தொடரும்
அடுத்து என்ன வரும் என்று எதிர்பார்க்க வைக்கிறது.
கதை மிகவும் சூடு பிடிக்கிறது வாழ்த்துக்கள்
இனிதே தொடங்கிய பயணம்..இனியும் இனிமையாய் தொடரட்டும்..
கதை நன்றாக பயணிக்கிறது.