யாரறிவார் உன் நிலை

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், கவிஞர் மற்றும் பகுத்தறிவாளர் என பன்முகம் கொண்ட சசிசந்தர் அவர்களின் கவிதை வரிகள் – tamil pothu kavithaigal.

tamil pothu kavithaigal

உள்ளத்தை யாரோ
தட்டுகிற ஓசை !
மௌனமாய் மெல்ல
திட்டுகிற பாஷை !

கன்னத்தை யாரோ
வருடுகின்ற ஆசை !
மௌனத்தை கலைத்துவிட்டு
மலர்கின்ற நிராசை !
உறவு அறிந்தும்
தொலைத்துவிட்ட பழசை ! – tamil pothu kavithaigal

எப்படி ஏற்றுக்கொள்ளும்
அன்பின் பரிசை!
அடிக்கடி எதிர்பார்க்கின்ற
போதாதா காசை !
யாரறிவார் எத்தனைபேரின்
திண்டாடும் மனசை!

– சசிசந்தர் திருப்பத்தூர்.

You may also like...

6 Responses

 1. Kavi devika says:

  வாழ்த்துகள். கவி .. மிக அருமை

 2. தி.வள்ளி says:

  திண்டாடும் மனதை திரை விலக்கி காட்டிவிட்டார் கவிஞர்.சசிசந்தர் அவர்கள்.வாழ்த்துகள்.

 3. R. Brinda says:

  அருமையான கவிதை!

 4. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

  அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ஐய்யா..

 5. Kasthuri says:

  வரிகள் பேசும் நிதானம், அருமை சார்….

 6. மாலதி நாராயணன் says:

  கவிஞரின் வரிகள் மனதை தொட்டன