கொரோ(நோஓஓ)னா(நாரதர்) – சிறுகதை

“நாராயண! நாராயண!” நாரதர் வைகுண்டத்தில் பெருமாளை தரிசிக்கும் ஆவலில் தேவலோகத்துக்குள் நுழைய.. அங்கே முக கவசத்துடன் நின்றிருந்த இரு காவலாளிகள் தங்கள் வேல்களை குறுக்கே வைத்து அவரை தடுத்தனர் .ஒரு முக கவசத்தை எடுத்து நீட்டி,”இதை முதலில் அணிந்து கொண்டு பிறகு பேசுங்கள்” என்று கொடுத்தனர் – corona short story.

corona short story tamil

எரிச்சலுடன் முகக் கவசத்தை பெற்றுக்கொண்ட நாரதர்
“என்னை ஏனப்பா தடுக்கிறீர்கள்? நான் யார் என்று தெரியுமா? “
“தெரியும் சுவாமி ..
தாங்கள் திரிலோக சஞ்சாரி நாரதர் .
அதனால்தான் தடுக்கிறோம் ஐயா…”
“வைகுண்டத்தில் நுழைய எனக்கே தடையா? என்னப்பா வேடிக்கை? எம்பெருமானுக்கு தெரிந்தால் உங்களுக்கு மிகப் பெரிய தண்டனை கிடைக்கும்.”

“இந்த உத்தரவை போட்டதே எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் “

“என்னப்பா இந்த திடீர் தடை?

” தாங்கள் இப்பொழுது பூலோகத்திலிருந்து தானே வருகிறீர்கள்! அங்கே புதுவித கிருமி மக்களைப் பிடித்து ஆட்டுகிறது. அது மிகவும் எளிதில் தொற்றக் கூடியது என்று கேள்விப்பட்டுத் தான் இந்த தடையை விதித்திருக்கிறார் எம்பெருமான்.”

“உண்மைதான்! அது எப்படி உங்களுக்கு தெரிந்தது?”

“நீர் வரும் வழியில் பார்க்கவில்லையா? எமலோகம் திமிலோகப்பட்டதுக் கொண்டிருக்கிறது. பூலோகத்திலிருந்து வரும் மனிதர்களால் யமலோகம் நிரம்பி வழிகிறது. அவர்களை தங்க வைக்க இடமில்லாமல், எமதர்மராஜன் விழித்துக் கொண்டிருக்கிறார்.கூடுதலாக ஒரு எமலோகம் கட்ட யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நபர்களிடமிருந்து வந்த தொற்று தேவ லோகத்தில் பலரை பிடித்தாட்ட ஆரம்பித்துவிட்டது .
மும்மூர்த்திகளும் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள். அனைத்து தெய்வ சக்திகளும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி அவதிப்படுகிறார்கள். எல்லாம் இந்த பூலோகவாசிகளால் வந்த வினை. எமதர்மன் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருந்தால், இந்த தொற்று தேவலோகத்திற்குள் நுழைந்திருக்காது.” – corona short story

“ஐயையோ! அப்படியா சங்கதி!” என்று அலறினார் நாரதர்.

“நாரதரே நீர் வேறு லோகத்திலிருந்து வந்திருப்பதால் தேவலோகத்தின் எல்லைக்குள் நுழைய முடியாது. அதோ இருக்கும் குவாரண்டைன். குடிலில் ..அவ்வாறு தான் அந்த பூலோக வாசிகள் அழைக்கிறார்கள். போய் இரண்டு வாரங்கள் தங்கும். உமக்கு உடலில் பிரச்சினை ஒன்றும் இல்லையென்றால் தான் தேவலோகத்துக்குள் நுழைய முடியும். இல்லாவிட்டால் திரும்ப பூலோகத்திற்கு சென்றுவிடும் !”என்று கறாராகக் கூற நாரதர் யோசித்தார்.

படாதபாடு

“ஐய்யோ! பூலோகத்தில் படாதபாடுபட்டுத் தானே தேவலோகத்துக்கு வந்தேன். இங்காவது நிம்மதியாக இருக்கலாம் என்று.மீண்டும் பூவுலகத்திற்கு சென்றால் இன்னும் பாடுதான். ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்ல பாஸ் கேட்கிறார்கள் .வான் வழியாகச் சென்று விடலாம் என்றால் அங்கேயும் ட்ரோன் கேமரா வைத்து கண்காணிக்கிறார்கள். தொற்று வந்துவிட்டாலும் அவ்வளவுதான்… ஏதோ ஆயுள் தண்டனைக் கைதியை பிடித்துக் கொண்டு போவது போல ஆம்புலன்சில் பிடித்துக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் அடைத்து விடுகிறார்கள் – corona short story.

பூலோகத்தை விட

சத்தான சாப்பாடு போட்டு நன்றாக கவனித்தாலும்., நம்மால் நாலு சுவருக்குள் அடைந்து கிடப்பது என்பது கண்டிப்பாக முடியாது. மக்களும் ஏதோ வேற்றுக்கிரக வாசியை பார்ப்பதுபோல நோய்த்தொற்று வந்தவரை பார்க்கிறார்கள். இதெல்லாம் சரிப்படாது எல்லாத்தையும் மறக்க சிறிது நேரம் டிவி பெட்டியை திரும்பினால், அதில் வரும் புள்ளிவிபரங்கள் தலை சுற்றுகிறது.எந்த நேரத்தில் யார் இருமுவார்களோ? யார் தும்முவார்களோ? அந்த கிருமிகள் காற்றில் அலைந்து பிடித்துக் கொள்ளுமோ என்ற பயத்தில் இங்கு வந்தால்… இங்கும் அதே கதை … வேறுவழியில்லை பூலோகத்தை விட இங்கு இருப்பது மேல் தான் என்ற முடிவுக்கு வந்தவராக …

ஒன்றும் பேசாமல் குவாரண்டின் குடிலை நோக்கி நடந்தார் நாரதர்…

இது கற்பனையாக சித்தரிக்கப்பட்ட ஒரு சிறு கதை, யார் மனதையும் புண்படுத்த எழுதப்படவில்லை.

– தி.வள்ளி, திருநெல்வேலி.

You may also like...

8 Responses

  1. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

    கவலைப்படாமல் இருங்கள் கவிஞரே அவர் நாரதர் எப்படியும் நாசுக்காக தப்பித்துக் கொள்ளவார்…!

  2. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

    கவலைப்படாமல் இருங்கள் கவிஞரே அவர் நாரதர் ஆச்சே எப்படியும் பிழைத்துக் கொள்வார்

  3. N.கோமதி says:

    வித்தியாசமான கற்பனை…அருமை…

  4. Rajakumari says:

    கதை வித்தியாசமாக நன்றாக இருக்கிறது

  5. R. Brinda says:

    மிகவும் அழகாகச் சித்திகரிக்கப்பட்டுள்ளது.

  6. நிர்மலா says:

    அருமை, அருமை.

    நாரதருக்கே இந்த கதி என்றால் பூலோக வாசிகள் !பாவம்.
    நல்ல கற்பனை. வாழ்த்துகள்.

  7. தி.வள்ளி says:

    உண்மையே….மிக்கநன்றி சகோதரரே!

  8. Kavi devika says:

    நற்கருத்தை நற்பயன்பெற நற்கதையால் புகுத்திய நிங்களுக்கு வாழ்த்துகள்