வார ராசிபலன் ஆவணி 14 – ஆவணி 20

ஆவணி மாத மின்னிதழ் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். விநாயகர் சதுர்த்தி 2020 பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். – rasi palangal aug 30 – sep 05.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். சுற்றுவட்டம் ஆதரவாக இருக்கும். உறவினர்கள் வருகை நன்மையில்  முடியும் . பணியாளர்கள் நல்ல பலனை எதிர்கொள்வார்கள். வியாபாரம் லாபகரமாக செயல்படும். கலைஞர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் நன்மை அடைவார்கள். விவசாயத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: நவகிரக  வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்து வருவார். குடும்பம் மகிழ்ச்சிகரமாக காணப்படும். சகோதரிகள் வழியில் நல்ல ஆதரவு கிடைக்கப் பெறும். குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் தலைமை பொறுப்பை அடைவார்கள். வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் சிறப்பு அடையும். கலைஞர்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும். மாணவர்கள் போட்டியில் வெற்றியை அடைவார்கள். விவசாயத்தில் விரயம் வரலா , கவனம் தேவை.
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு சாலச்சிறந்தது.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் பணவரவு நன்றாகவே அமையும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து மறையும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். அண்டை வீட்டார்கள் நட்புறவுடன் இருப்பார்கள். பணியாளர்கள் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் ஆகலாம். கலைஞர்கள் பிரகாசமாக காணப்படுவார்கள். மாணவர்கள் நன்மதிப்பைப் பெறுவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சுக்ரபகவான் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. பணவரவு நன்றாகவே இருக்கும், சகோதர சகோதரிகள் ஆதரவு பெருகும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமையும். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் நல்ல பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பார்கள். விவசாயம் காய்கறி விவசாயத்தின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
வழிபாடு: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். வீட்டில் பணவரவு நன்றாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக அமையும். குடும்பத்தினர் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்புகள் உள்ளன. திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கலைஞர்கள் இடையூறுகளை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் இரட்டிப்பு வெற்றி அடைவார்கள். விவசாயத்தில் நல்ல பாக்கியம் பெறலாம்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே அமையும். உறவினர் வருகை பகைமையை உருவாக்கும், வீண் விரையம் ஒன்று உருவாகலாம். பணியாளர்கள் ஏதாவது ஒரு வகையில் நன்மை அடைவார்கள். வியாபாரம் லாபம் ஈட்டித் தரும். கலைஞர்கள் எதிர்பார்த்த பணவரவு அமையும். மாணவர்கள் நல்ல உயர்வைப் பெறுவார்கள். விவசாயம் நஷ்டத்தையே எதிர்கொள்ளும்.
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு எதிர்பார்த்த அளவு அமையும். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் பிரகாசமாக காணப்படுவார்கள். வியாபாரம் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்வார்கள். விவசாயம் நல்ல லாபம் அடையும்.
வழிபாடு: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு போதிய அளவு இருக்கும், வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும், வாகனயோகம் இந்த வாரம் நன்கு அமையும். பணியாளர்கள் உச்சம் பெறுவார்கள். வியாபாரத்தில் பூஜை பொருள் சம்பந்தமானவை நல்ல லாபம் பெறும். கலைஞர்கள் பாக்கியசாலிகளாக திகழ்வார்கள். மாணவர்கள் வெற்றிகரமாக செயல்படுவார்கள். விவசாயத்தை எதிர்நோக்கும்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு போதிய அளவு இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். சகோதர சகோதரிகள் ஒற்றுமை நிலவும். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் நன்மதிப்பைப் பெறுவார்கள். வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் விரயமே எதிர்கொள்வார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயத்தில் நல்ல வருவாய் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணவரவு நன்றாகவே இருக்கும். சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் நல்ல ஆற்றல் பெறுவீர்கள். பணியாளர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். வியாபாரம் இரட்டிப்பு வருமானம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் வெற்றி அடைவார்கள். விவசாயம் சுமார் பலனே கிடைக்கும்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமை தினத்தில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் சூரிய பகவான் பல ஆற்றல்களை பெறுவார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆண் வாரிசு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்துடன் அன்பு மேலோங்கும். அண்டை வீட்டார்கள் உங்கள் வசம் சரண் அடைவார்கள். பணியாளர்கள் சுமாரான வெற்றியை அடைவார்கள். வியாபாரத்தில் ஆபரணங்கள் சம்பந்தமானவை நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் வாழ்வில்  வெற்றி பெறுவார்கள்.  மாணவர்கள் தோல்வியை எதிர்கொள்வார்கள். விவசாயத்தில் நடுத்தர வருவாய் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் செவ்வாய் பகவான் பல நன்மைகளை செய்வார். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். புதிய வாகனம் வாங்க யோகம் உண்டு. பணவரவு நன்றாகவே உள்ளது. சுப செய்தி ஒன்று வந்து சேரும். பணியாளர்கள் உச்சம் பெறுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். கலைஞர்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார்கள். மாணவர்கள் பெற்றோர் மத்தியில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயத்தில் கூடுதல் வருமானம் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும் – rasi palangal aug 30 – sep 05.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

2 Responses

  1. Rajakumari says:

    ராசிபலன் எப்போதும் ஐயா சொன்ன மாதிரி நடக்கின்றது நான் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருப்பேன் மிக்க மகிழ்ச்சி நன்றி

  2. தி.வள்ளி says:

    படிக்கும் போது, நற்பலன்கள் மனதிற்கு நம்பிக்கையளிக்கிறது..ஐயா அவர்களுக்கு நன்றி…