பேனா மைபேசும் திரவம் – நூல் விமர்சனம்

தண்டமிழ்தாசன் பா. சுதாகர் அவர்களின் ஹைக்கூ கவிதை “பேனா மைபேசும் திரவம்” நூல் விமர்சனம் – pena mai pesum thiravam puthaga vimarsanam.

pena mai pesum thiravam puthaga vimarsanam

ஒரு நூலை எழுதி புத்தகமாக வெளியிடுவது என்பது அத்தனை எளிதானதல்ல
படைப்பாளிகளுக்கு . எப்படி ஒரு தாய் கருவில் உயிரைச் பத்து திங்கள் சுமந்து குழந்தையை பெற்றெடுக்கிறாளோ அதைப்போலத்தான் தன் மனதில் தோன்றும் கருத்துக்களை அரும்பாடுபட்டு சொற்பதங்கள் ஆக மாற்றி கவிதை, கட்டுரை, சிறுகதை என பல பரிமாணங்களில் சிறந்த நூலாக வெளியிடுகிறார்…

அத்தகைய மிகச்சிறந்த செயல்பாட்டினை செய்யும் ஒவ்வொரு படைப்பாளியையும் வாரம்தோறும் அறிமுகப்படுத்தி பாராட்டிக் கொண்டிருக்கும் நீரோடை என் மனமார்ந்த பாராட்டுக்கள் இந்த
வாரம் அறிமுகம் செய்ய இருக்கும் கவிஞர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் கோட்டயம் செங்கோட்டையில் ஆசிரியராக பணிபுரியும் எனதருமை சகோதரருமான தண்டமிழ் தாசன் பா சுதாகர் அவர்கள். அவருடைய “பேனா மை பேசும் திரவம்” என்ற நூலைப் பற்றிய விமர்சனப் பதிவு உங்களுக்காக…. – pena mai pesum thiravam puthaga vimarsanam

சிகரம் தொட்ட ஆசிரியர் தமிழ்தாசன் இளம் கவி இளம்தென்றல் எனப் பல விருதுகளை பெற்றவர்….

கண்டமல் தாசனின் கவிதை பூக்களில் அனைத்துவிதமான பல வண்ணங்கள் கொண்ட அழகிய பூக்களின் நறுமணங்களை நம்மால் நுகர்ந்து சுவாசிக்க முடிகிறது வாருங்கள் நாமும் கவிதைச் சோலைகள் சென்று சிறிது இளைப்பாறி விட்டு வரலாம்

ஆத்திச்சூடியில் தொடங்கி தனது மன உள்ள கருத்துக்களை தனித்தனி தலைப்புகளுடன் ஹைக்கூ கவிதைகள் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாக்கி உள்ளார்….

சூரியன்
இரவை திருடி
நிலவை மறைத்து வைக்கும் ‘கள்வன்’!!

கண்ணீர்
துன்பத்தைத்
துடைக்க உதவும்
‘தீர்த்தம்’!!

சிப்பிக்குள் முத்து
கடல் உயிரின்
கருவினுள் ஒரு
குட்டி குழந்தை!!

ஆஹா எத்தனை அழகு… அவருடைய பதமான படைப்புகள் படிக்கப் படிக்க மனதில் இன்பத்தை விதைக்கும் நற்கவிதைகளின் கூட்டு… ஆங்காங்கே காணப்படும் எதுகை மோனை என் நல்லதோர் திரட்டு… நான் சுவாசித்து இன்புற்ற மலர்களின் மனத்தை நீங்களும் சுவாசிக்க வேண்டுகிறேன்……

– கவி தேவிகா, தென்காசி.

இந்த கட்டுரை மூலம் தொடர்ந்து வளரும் எழுத்தாளர்களை (புத்தகம் எழுதி வெளியிட்டதன் மூலம் புத்தக ஆசிரியரை) அறிமுகம் செய்வதில் நீரோடை பெருமிதம் கொள்கிறது, மற்றும் அதற்கு நூல் மதிப்பீடு (நூல் அறிமுகம் / புத்தக விமர்சனம்) எழுதியதன் பலனாக கட்டுரை ஆசிரியருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

புத்தகம் தேவைப்படுவோர் நீரோடையை தொடர்புகொள்ளவும், பெற்றுத்தர முயல்கிறோம்,
வாட்சாப் எண்: 9080104218
மின்னஞ்சல்: info@neerodai.com

You may also like...

5 Responses

  1. Kavi devika says:

    மேலும் சிறக்கட்டும் நீரோடையின் பணி….💐💐💐

  2. Rajakumari says:

    ஹைக்கூ கவிதைகள் செம சூப்பர்.

  3. R. Brinda says:

    கவி தேவிகா அவர்கள் மிக அழகாக நூல் விமர்சனம் செய்திருக்கிறார். பாராட்டுக்கள்!

  4. தி.வள்ளி says:

    சகோதரி கவி தேவிகாவின் விமர்சனம் மிகவும் அருமை .அவர் கூறியது போல ஒரு புத்தகம் வெளியிடுவதென்பது ஒரு தாய் தன் கருவறையில் பத்து மாதம் சிசுவை தாங்கி பிரவிப்பது போல இன்பம் கலந்த மிக சிரமமான விஷயமே.இளம் கவியின் இனிய முயற்சியில்,அவர் கவிதையின் சாரலே மிக இனிமையாக உள்ளது அவர் மென்மேலும் வளர பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!!

  5. கு.ஏஞ்சலின் கமலா says:

    நல்ல விமர்சனம் படை ப்பாளிகளுக்கு
    சிறந்த ஊட்டச்சத்து.கவிஞரின் விமர்சனமும் அவ்வாறு இருந்தது. பாராட்டுகள்.