சிவ நாமம் எல்லாவற்றையும் புனிதமாக்கி விடும்
ஆன்மீக சொற்பொழிவும், ஆன்மீக சிறுகதைகள் வாசிப்பும் நம்மை மேம்படுத்தும், மேலும் நல்வழியில் என்றும் பயணிக்க செய்யும் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை – siva namam tamil.
சிவ சிவ என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும் குமரேசன் என்று ஒரு பக்தன் இருந்தான். அவனது மனைவியும் பக்தி மிக்கவள். அவர்களது தோட்டத்தில் உணவுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் கீரை தரும் செடிகளுக்கு குறைவில்லை. துறவிகளுக்கு அன்னமிட்ட பின் உணவு உண்பது அவர்களது வழக்கம். ஒருநாள் கோவிலில் இருந்த துறவியைக்கண்டு வீட்டிற்கு விருந்து உண்ண வரும்படி குமரேசன் அழைத்தார்.
தனித்தனியாக சமைத்தார்
ஐயா! தங்களுக்கு பிடித்த காய்கறியை சொன்னால், சமையலை தொடங்குவேன் என்றார். உடனே அந்த துறவி காய்கறிகள் பயிரிட்டிருந்த இடத்துக்கு சென்றார். அங்கே கீரை வளர்ந்திருந்ததை பார்த்தார். எனக்கு ’கீரைத்தண்டு சாம்பாரும், முளைக்கீரை கூட்டும் போதும்’ என்றார்.
குமரேசனும் கீரை பறித்தார், அந்த துறவியும் உதவிக்கு வந்தார். குமரேசன் பறித்த கீரையையும், துறவி பறித்த கீரையையும் தனித்தனியாக சமைத்தார் சிவகாமி – siva namam tamil.
துறவி பறித்த கீரையை பூஜையறையில் நைவேத்யம் செய்தார். குமரேசன் பற்றித்த கீரையை சாமிக்கு படைக்கவில்லை. தான் பறித்த கீரைக்கு முக்கியத்துவம் தர எண்ணியே, இப்படி நடப்பதாக அந்த துறவி எண்ணினார்.
உண்மையான பக்தர்
சாப்பிடும் போது சிவகாமியிடம் இதுபற்றி கேட்டார். ஐயா! என் கணவர் சிவநாமம் சொல்லி கீரை பறித்ததால் முளைக்கீரை – சிவக்கீரை ஆகி புனிதமாகிவிட்டது. அதனால் பூஜையில் வைக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கடவுள் பெயரை சொல்லாமல் பறித்தீர்கள், அதனால் அதை நைவேத்யம் செய்து புனிதப்படுத்திக் கொண்டேன் என்றார்.
இந்த விளக்கத்தை கேட்ட அந்த துறவி கலங்கிப் போனார். உண்மையான பக்தர்கள் இவர்கள்தான் என்பதை புரிந்துகொண்டார்.
ஓம் நமசிவாய
ஆன்மீக கட்டுரை மனதில் நிம்மதி தரும் ஆழமான நற்கருத்து கட்டுரை.
நல்ல பதிவு! அதனால் தான் சமைக்கும் போது கூட இறைவன் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே செய்வார்கள் நம் முன்னோர்கள்!
ஆத்மார்த்தமான பக்தி என்றும் சிறப்பிற்குரியது என்பதை அழகாக,ஆணித்தரமாக விளக்குகிறது.
அருமையான கதை
கடவுள் பெயரை ஜபித்து சமையல் செய்தால் விஷம் கூட அமிர்தம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்
ஓம் நமசிவாய
மனநிறைவு தரும் பதிவு.. நன்றி