உளுந்து பருப்பு சாதம், அவியல், எள் துவையல்
கருப்பு உளுந்து உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் பல நன்மைகள் நமக்கு ஏற்படும் இது ஒரு சிறந்த நல்ல ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது இந்த பருப்பை வைத்து சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம் – ulunthu satham el thuvaiyal
உளுந்து சாதம்
தேவையான பொருள்கள்
கருப்பு உளுந்து – ஒரு கப் புழுங்கல்
அரிசி – 2 கப்
வெந்தயம் – ஒரு மேஜைக்கரண்டி
சீரகம் – ஒரு மேசைக்கரண்டி
பூண்டு – பத்து பல்
துருவிய தேங்காய் – கால் கப்
உப்பு தேவையான அளவு
நல்லெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி.
செய்முறை
கறுப்பு உளுந்து சீரகம் வெந்தயம் இவற்றை பொன்னிறமாக வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும் .பிறகு குக்கரில் வறுத்து வைத்த பருப்பு இதனுடன் அரிசியையும் களைந்து , இவற்றை கலந்து குக்கரில் போடவும். தேவையான அளவு உப்பு நல்லெண்ணெய் தேங்காய் துருவல் பூண்டு பற்கள் இவற்றையும் சேர்த்து 4 முதல் 5 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடவும் மூன்று நாள் தேவையான அளவு விசில் வந்ததும் குக்கரை
இறக்கி சூடாகப் பரிமாறவும்.
இந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிட பொருத்தமான துவையல் மற்றும் காய்கறியும் இப்போது பார்க்கலாம் – ulunthu satham el thuvaiyal.
எள்ளுத் துவையல்
தேவையான பொருள்கள்
எள் – கால் கப்
தேங்காய் – துருவல் கால் கப்
காய்ந்த மிளகாய் – 5
கருப்பட்டி ஒரு சிறிய துண்டு
உப்பு தேவையான அளவு
செய்முறை
எள்ளை வாணலியில் வெடிக்க விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும் காய்ந்த மிளகாயையும் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும் வதக்கிய இவ்விரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு கருப்பட்டி தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக துவையல் போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அவியல்
தேவையான பொருள்கள்
கேரட் -1
பீன்ஸ் – 5
வாழைக்காய் – 1
உருளைக்கிழங்கு -1
மாங்காய்- சிறிய துண்டு
முருங்கைக்காய் – 1
கத்தரிக்காய் – 3
தேங்காய் – ½ கப்
மிளகாய் – 3
பூண்டு -5 பற்கள்
சீரகம் -1 மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை – தாளிக்க
தயிர் – ¼ கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
மேலே சொன்ன காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கி வேக வைத்து கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் துருவல் பூண்டு சீரகம் மிளகாய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும் . வேகவைத்த காய்கறியோடு அரைத்த தேங்காய் விழுதுகளை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு தயிரை சேர்த்து தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறிது கொதிக்க விடவும் . பச்சை வாசனை போனதும் தேங்காய் எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து சுவையாக பரிமாறவும் – ulunthu satham el thuvaiyal. – கவி தேவிகா, தென்காசி
முத்தான 3 ரெசிபீஸ் நன்றி
வாழ்க வளமுடன்… உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல் உணவு.
கவிதேவிகா அவர்களின் உளுந்தம் பருப்பு
சாதம் அருமை. பாராட்டுகள்
அட இது எங்க ஊரு(திருநெல்வேலி )ஸ்பெஷல் ஆச்சே…பெண்களுக்கு மிகமிக சத்தான உணவு இது. இந்த ஆச்சிஇருக்கும் போது லேசாக .குறுக்கு(இடுப்பு )வலிக்கிறது என்று சொன்னால் ..உடனே அடுத்த நாள் இந்த உ.பருப்பு சாதம் தான் .அந்த அளவு இடுப்பிற்கு பலம் சேர்க்க கூடியது.கருப்பு உளுந்து பயன்படுத்துவது அவசியம். இன்றும் எங்கள் பகுதியில் பூப்பெய்திய பெண்களுக்கு இரண்டாம் நாள் உளுந்த பருப்பு சாதம் அவியல் செய்து உறவினர்களுக்கும் கொடுத்து அந்தப் பெண்ணுக்கும் கொடுப்பது வழக்கம். மிக சத்துள்ள உணவை எல்லோருக்கும் அறிமுகப்படுத்திய சகோதரி தேவிகா அவர்களுக்கு மிக்க நன்றி
சத்தான உணவு வகைகள்.. அருமை
சமையல் குறிப்புகளுக்கு நன்றி
நெல்லை ஸ்பெஷல் உளுந்து சாதத்திற்கு கூழ்வற்றலும், வெங்காய வடகமும் பொரிக்கலாம்.