குடைக்குள் மழை சலீம் கவிதைகள்
இந்த பதிவு (கவிதைகள் தொகுப்பு 26) வாயிலாக மரபுக்கவிதை வித்தகர் “குடைக்குள் மழை சலீம்” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 26
காத்திருப்பு
ஈர விழியின்
தடங்கள்
சொல்கிறது
இன்னமும்….
உன் தேடலில்
நானிருக்கிறேன்
என்பதை…
இருப்பு
கொள்ளமுடியாமல்
வந்து போகிறாய்…
இதயமெங்கிலும்
சோகம் கப்பிய
நினைவுகளோடு…
கொலுசின்
ஓசையோடு
கொஞ்ச தூரம்
கடந்து வா…
ஆறுதல்
படுத்த முடியாமல்
ஒரு ஆத்மா
அழுவது புரியும்
உனக்கும்…!!
கனவுகள்
இழையோடும்
மெல்லிய
புன்னகையோடு
வந்து போகிறாய்..
நினைவு
பக்கங்களை
திருப்பும்
போதெல்லாம்…
விழிகளின்
பிம்பங்களில்
எதிரொலிக்கிறது…
உன் தேடலில்
நானிருக்கும்
ரகசியங்கள்…
வெளிக்காட்ட
முடியாதவளாய்
திரை சீலைக்கு
பின்னால் நீ…
காற்றின்
இடைவெளியில்
வெட்க புன்னகையை
ரசித்த படியே நான்…
இன்னும்
கொஞ்சநேரம்
இப்படியே
நீண்டிருக்கலாம்…
விடியலை
காரணம் காட்டி
வெளியேறிய
கனவுகள்…!!
– குடைக்குள் மழை சலீம்
அருமை…. வாழ்த்துகள் கவிஞருக்கு…. நீரோடைக்கு வரேவேற்கிறோம்…..
காதல் ஏக்கத்தை வெளிப்படுத்தும் அற்புத வரிகள் ..அவர்கள் கனவு நீண்டிருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது ..அருமை..கவிஞருக்கு வாழ்த்துகள்.
கவிதை நன்றாக இருக்கிறது
கவிதைகள் அருமை, எழுத்தில் பக்குவம் தெரிகிறது.. வாழ்த்துக்கள் சலீம்..