என் மின்மினி (கதை பாகம் – 32)
சென்ற வாரம் – பதிலுக்கு ஒன்றும் பேசாதவளாக தன் இன்னொரு கையினை அவன் கையின் மேலே வைத்தபடி என் கூட இப்போது போலே எப்போதும் இருப்பேதானே என்றபடி புன்னகைத்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-32.
ஹே என்ன ஆச்சு நானாக உன்னோட கையை பிடிச்சா உதறி தள்ளுற ஆளு நீ.இன்னிக்கு என்ன ஒரே அதிசயமா இருக்கு… ஒரு வேளை அதுதான் மேகம் இருள் சூழ்ந்து கிடக்கு.,இன்னிக்கு மழை வெளுத்து வாங்க போகுது போலே என்றபடி நாக்கை கடித்தான் பிரஜின்.
ம்ம் ஓகே ஓகே ரொம்ப பூரிப்பில் பொங்கி வழியாதே.எனக்கு நேரம் ஆகுது ஹாஸ்டல் போகணும் இல்லையென்றால் இப்போ அவ்வளவு தான் என்றாள் ஏஞ்சலின்.
சரி போகலாம் வா என்றபடி அவளது சுண்டுவிரலை பிடித்தபடி மெதுவாக நடந்து சென்றான் பிரஜின் ஹே என்ன பண்றே நமக்கு கல்யாணம் ஆகி மணவறையினை சுற்றி வருவதாக நினைப்போ.அப்படியே மாப்பிளை
தோரணையில் நடக்குறே.முதலில் என்னோட விரலை விடு என்றாள் ஏஞ்சலின்.
எதை செய்தாலும் ஏதோ சொல்லி நம்மள மடக்குறாளே என்று மனசுக்குள்ளே நினைத்தபடி புன்முறுவல் செய்தான் அவன். என்ன எதாவது என்னை திட்டலாம்ணு தானே யோசிக்கிறே.வேற எதாவது புதுசா யோசிக்கவா போறே என்றாள் ஏஞ்சலின்.
இல்லை இல்லை.அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.உனக்கு நேரம் வேற ஆகுது.வா சீக்கிரம் உன்னை கொண்டு ஹாஸ்டலில் விடுகிறேன் என்றான் அவன்.
ஓகே போகலாம் என்று அவள் சொல்ல அவனது டுவீலர் பயணம் இனிமையான தென்றல் காற்றுடன் மீண்டும் தொடங்கியது.
சாலையோரம் உள்ள மரம், செடி, கொடி இட்லிகடை, இளநீர் கடை என்று ஒன்று விடாமல் வேடிக்கை பார்த்து கொண்டே எதுவும் பேசாதவளாக மென்காற்றை மெதுவாக ரசித்த படி பின்னே அவள் அமர்ந்திருக்க எதையும் பாராமல் டூவீலர் மட்டும் ஓட்டுவதை போலே நடித்து கொண்டே தன் முன்னே இருந்த கண்ணாடியில் அவளை ரசித்தபடி அவன் அமர்ந்திருக்க இருவரின் பயணமும் இனிமையாக தொடர்ந்தது – en minmini thodar kadhai-32
– அ.மு.பெருமாள்
பாகம் 32-ல் தொடரும்
காதலர் பயணம் இனிமையாக தொடரட்டும்…. கதையும் வளரட்டும் …வாழ்த்துக்கள் .
கதை விறுவிறுப்பாக போகிறது