வார ராசிபலன் மார்கழி 05 – மார்கழி 11
மார்கழி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal dec-20 to dec-26.
மேஷம் (Aries):
மேஷம் இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். இந்த வாரம் பணிச்சுமை குறையும். உறவினர் வருகை தீமையில் முடிய வாய்ப்புள்ளது. பணவரவு சுமாராகவே காணப்படும். பணியாளர்கள் நல்ல உயர்வை அடைவார்கள். வியாபாரம் லாபகரமாக அமையும். கலைஞர்கள் நஷ்டமே அடைவார்கள். மாணவர்கள் தோல்வியை சந்திப்பார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
ரிஷபம் (Taurus):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். எதையும் நன்றாக சாதிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புகள் உள்ளன. கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பணியாளர்கள் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படும். வியாபாரிகள் கவனமாக இருக்கவும். கலைஞர்கள் முழு வெற்றி அடைவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயிகள் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.
மிதுனம் (GEMINI):
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். மனதில் சிறு தடுமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதையும் திறமையாக செயல்படுத்துவீர்கள். பணவரவு நன்றாகவே இருக்கும், குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கலைஞர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பரிகாரம்: நவகிரக வழிபாடு செய்து வரவும்
கடகம் (Cancer):
இந்த வாரம் குரு பகவான் நன்மையே செய்வார். வீண் விவாதங்களை செய்ய வேண்டாம். பிரச்சனை மறையும், அண்டை வீட்டார்கள் உங்கள் வசம் சுமுக உறவை நாடுவர். பணியாளர்கள் சக ஊழியரின் ஆதரவை பெறுவார்கள். வியாபாரத்தி பூஜை பொருள் சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். விவசாயிகள் நல்ல பாக்கியசாலியாக திகழ்வார்கள்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.
சிம்மம் (LEO):
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். புதிய நண்பர்கள் தேடி வருவார்கள். எதிலும் வெற்றி கிடைக்கும். பணியாளர்கள் மகிழ்ச்சிகரமாக தென்படுவார்கள். வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். விவசாயத்தில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
கன்னி (Virgo):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். மக்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். இந்த வாரம் பொதுப்பணியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அண்டை வீட்டாரிடம் செல்வாக்கு உயரும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் ஆபரணம் போன்றவை நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். மாணவர்கள் வெற்றிப்பாதைக்கு செல்வார்கள். விவசாயத்தில் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.
துலாம் (Libra):
இந்த வாரம் சுக்ரபகவான் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் நிலவும், குடும்பத்தில் பெரியோர் சொல்படி நடக்கவும். உங்கள் வருவாய் உயர்வு பெறும். பணியாளர்கள் சிரமத்தை எதிர்கொள்வார்கள். வியாபாரம் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்களுக்கு பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். விவசாயம் நடுத்தரமாகவே அமையும்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய பகவான் வழிபாடு செய்து வரவும்.
விருச்சிகம் (Scorpio):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை மறையும். வீட்டுத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் புதிய பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரத்தில் கடன் ஏதும் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் அரசாங்க ஆதரவு பெறுவார்கள். மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தின் கீழ் வெற்றி காண்பார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு செய்து வரவும்.
தனுசு (Sagittarius):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணவரவு நன்கு அமையும். உங்கள் ஆயுள் பலம் நல்ல முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் வர வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் பணி நன்றாக அமையும். வியாபாரத்தில் கவனம் தேவை. கலைஞர்கள் வருமான இழப்பை சந்திப்பார்கள். மாணவர்கள் தோல்வியே அடைய வாய்ப்புள்ளது. விவசாயத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு செய்தல் நல்லது.
மகரம் (Capricorn):`
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உறவினர் வருகை நன்மை பயக்காது. புதிய பொறுப்புகள் உங்கள் வசம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் லாபம் அடைவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கலாம். கலைஞர்கள் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெறுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயிகள் காய்கறி சம்பந்தப்பட்டவை நல்ல ஆதாரம் கிடைக்கும்.
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.
கும்பம் (Aquarius):
இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். குடும்பம் மகிழ்ச்சிகரமாக காணப்படும். உங்கள் வசம் இருந்த கருத்துவேறுபாடு மறையும். பிள்ளைகள் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். வியாபாரம் நல்ல வளர்ச்சி அடையும். கலைஞர்கள் மகிழ்ச்சிகரமாக தென்படுவார்கள். மாணவர்கள் பெற்றோரின் ஆதரவை பெறுவார்கள். விவசாயத்தில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தினத்தில் சிவ வழிபாடு செய்து வரவும்.
மீனம் (Pisces):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அண்டைவீட்டார் வசம் கவனமாக இருக்கவும். பிள்ளைகள் வசம் நல்ல கவனம் செலுத்தவும். பணியாளர்கள் ஆரோக்கியமாக காணப்படுவார்கள். வியாபாரத்தில் பழவகை சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் இரட்டிப்பு வருமானம் அடைவார்கள். மாணவர்கள் நன்மையே அடைவார்கள். விவசாயத்தில் நல்ல வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும் – rasi-palangal dec-20 to dec-26.
– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு)
ராசி பலன்கள் எப்போதும் சரியாக இருக்கிறது
சரியாக கணிக்க பட்ட பலன். பாராட்டுக்கள்