மருமகள் மகளான கதை
சென்னை அம்பத்தூரில் இருந்து பாரதிராஜன் அவர்கள் எழுதிய பாசப்போராட்டம் சிறுகதையாக வாசிக்கலாம் – marumagal magalaana kathai.
பிரகாஷ் லண்டனில் பணிபுரிந்த சமயத்தில் அவன் வீட்டில் இருந்து போன். போனில் வந்த செய்தியை கேட்டதும் ஆடிப் போனான் பிரகாஷ் . அப்படி போனில் வந்த செய்தி என்ன என்றால் பிரகாஷின் அத்தை கலா உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மிகவும் சீரியஸ் கண்டிஷன். பிரகாஷை வளர்த்து அவன் வளர்ச்சியில் மிகவும் பெருமை அடைந்தவர் கலா அத்தை.
மருத்துவரிடம் அத்தையை நன்கு கவனித்துக் கொள்ள சொன்ன பிரகாஷ் லண்டன் ஏர்போர்ட் வந்து விமானத்தில் ஏறி னான். மனதில் கலா அத்தை யைப் பற்றி பழைய நினைவுகள் வர ஆரம்பித்தது.
பிரகாஷின் மாமா ராமுவைப் பெண் பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கலா அத்தை ஊர் செஞ்சி க்கும் திருவண்ணாமலை க்கும் அருகில் ஒரு கிராமம். நல்ல ஐப்பசி மாதத்தில் திருமணம் நடை பெற இருந்தது. திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது – marumagal magalaana kathai.
ராமுவின் அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள் புடை சூழ சென்னையில் இருந்து பேருந்தில் பயணம் செய்தார்கள். மழை வேறு பெய்து கொண்டிருந்தது. செஞ்சி தரைப் பாலத்தில் பேருந்து இறங்கியதும் தீடிரென வந்த வெள்ளத்தில் பேருந்து அடித்து செல்ல, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் மூழ்க ராமுவின் பெற்றோர் மற்றும் வேறு பயணிகள் தப்பினர்.
கல்யாண மாப்பிள்ளை ராமு அவன் நண்பர்களுடன் வெள்ளத்தில் சிக் கி காலமானார்.. ராமுவின் பெற்றோர் மற்றும் கலா அத்தை பெற்றோர்கள் ரொம்ப ரொம்ப வருத்தப்பட்டார்கள். கலா உடனேயே அவளின் மாமானார் மற்றும் மாமியார் கூட சென்னைக்கு கிளம்பி அவர்கள் வீட்டில் தங்கி விட்டாள்.
ராமுவின் தங்கை ஷீலா வின் மகன் தான் பிரகாஷ் . அந்த பிரகாஷ் தன் குழந்தையை ப்போல பாதுகாத்தார். பிரகாஷ் மேல் படிப்பிற்காக லண்டன் சென்று அங்கே இருந்த சமயத்தில் அத்தையின் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் சென்னை க்கு வந்து சேர்ந்தான். சென்னைக்கு வந்து நேரடியாக மருத்துவமனை க்குச் சென்று அத்தையை பாத்ததும் அழுது விட்டான்.
அத்தை பிரகாஷிடம் சன்னமான குரலில் பேசி பின்னர் உயிரை விட்டார். பிரகாஷ்க்கு இரண்டு மாதத்திற்கு முன்பு தான் கலா அத்தை அவனின் அம்மா இல்லை அத்தை என்று தெரிந்தது. திருமணம் செய்து கொள்ளாமலே மருமகள் மகளான கதை இது.
– பாரதிராஜன், சென்னை
கதை நன்றாக இருக்கிறது
நெகிழ்ச்சியான கதை…பாராட்டுகள்..
அருமையான கதை.