கூட்டாஞ்சோறு

சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் திருநெல்வேலி ஸ்பெஷல் “கூட்டாஞ்சோறு” செய்முறை – kootansoru seivathu eppadi

kootansoru seivathu eppadi

தேவையானவை:

(4-5 பேர் சாப்பிடலாம்)
1) புழுங்கல் அரிசி 2 கப் (பச்சரிசி சுவை தராது)
2) துவரம்பருப்பு கால் கப்
3) புளி எலுமிச்சை அளவு
4) மிளகாய் வற்றல் நான்கு- ஐந்து
5) காயம் கால் ஸ்பூன்
6) மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
7) கல் உப்பு தேவைக்கு
8) தேங்காய் துருவல்- இரண்டு ஸ்பூன்
9) சின்ன வெங்காயம் 10
10) பூண்டு 5- 6 பல்
11) பெல்லாரி 1( நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்)

காய்கறி ;
நறுக்கிய காய்கறி ஒரு கப் : முருங்கைக்காய்-1, வாழைக்காய்-1, உருளைக்கிழங்கு-1 ,கத்திரிக்காய்-1, அவரைக்காய்-3, சீனி அவரைக்காய்4 ,கேரட்-1( சின்னது ) முருங்கைக்கீரை… ரெண்டு கைப்பிடி அளவு ஆய்ந்து வைத்துக் கொள்ளவும் .(நாட்டுக் காய்கள் மட்டுமே பயன்படுத்தினால் சுவை நன்றாக இருக்கும்) – kootansoru seivathu eppadi

அரைக்க வேண்டியது :

மிளகாய் வற்றல், சீரகம் ஆகியவற்றை தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொண்டு பொடியானதும் வெங்காயம், பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

வதக்க:

நறுக்கிய பெல்லாரி வெங்காயம்,,,, 2 மிளகாய் வத்தல் கிள்ளிப் போட்டது,,காயம் ஆகியவற்றை வதக்கி கொள்ளவும
புளி..புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்

செய்முறை:

குக்கரில் அரிசி மற்றும் துவரம் பருப்பை தண்ணீர் விட்டு களைந்து போடவும்.. அதில் நறுக்கிய காய்கறிகள், கீரை முதலியவற்றை கழுவி சேர்க்கவும்… .மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும். பிறகு கரைத்து வைத்துள்ள புளியை அளந்து கொண்டு ஒரு கப் தண்ணீருக்கு 3 கப் கரைத்த புளி தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து அரைத்த மசாலாவையும் கலந்துகொண்டு அடுப்பில் வைக்கவும் (தண்ணீர் அளவு கூடவோ குறையவோ இல்லாமல் சரியாக இருந்தால்தான் பக்குவமாக வரும்)

வெயிட் போடும் முன் தீயை குறைத்து விட்டு குக்கரின் மூடியை திறந்து தேங்காய் துருவல் மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடி வெயிட் போட்டு மீடியம் தீயில் ஒரு விசில் வைத்து அணைக்கவும்.(தீயைக் கூட்டி வைத்தால் அடி பிடித்து விடும்)

நல்லெண்ணெய் 10 ஸ்பூன்… வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை( கொஞ்சம் அதிகமாக) போட்டு தாளிக்கவும். வெங்காய வடகத்தை உதிர்த்துக் கொண்டு தாளிப்பில் சேர்த்து கிளறினால் ,சுவை அருமையாக இருக்கும் .

(எல்லா சத்துக்களும் உள்ள சரிவிகித சத்துணவு என்பதால் கர்ப்பிணிகளுக்கு எங்கள் ஊரில் மூன்றாம் மாதம் முதல் கூட்டாஞ்சோறு கொடுப்பது வழக்கம்…நெருங்கிய உறவுகள் கூட்டாஞ்சோறு செய்து கர்ப்பிணிகளுக்கு எடுத்துக்கொண்டு போய் பார்த்து விட்டு வரும் வழக்கமும் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது)

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...

7 Responses

  1. கு.ஏஞ்சலின் கமலா says:

    நன்று. அருமை. பாராட்டுகள் வள்ளி mam.

  2. surendran sambandam says:

    செய்து சுவைக்க ஆவலை தூண்டுகிறது கூட்டாஞ்சோறு.

  3. N.sana says:

    எங்கள் வீட்டில் நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு செய்வோம்……சூப்பர் ரெசிபி…

  4. N.கோமதி says:

    நெல்லை ஸ்பெஷல் ..கூட்டாஞ்சோறு.முருங்கை இலை கைப்பிடி சேர்க்க மணமும், சுவையும் கூடும்.

  5. N.கோமதி says:

    எங்கம்மா காய்களுடன்கைப்பிடி முருங்கை இலை சேர்ப்பாள்.

  6. நிர்மலா says:

    திருநெல்வேலியின் கூட்டாஞ்சோறு செய்முறை விளக்கத்திற்கு மிகவும் நன்றி .

  7. தி.வள்ளி says:

    மிக்க நன்றி சகோதரி..