பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 8
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 8
பிணத்தினைப் போற்றேல்
பெற்றோர் இட்ட உன்பெயர்
ஒர் நாள் மறைந்தே ஏதும்
இயலா பிணமென்றேதான்
மாறுதல்இயல்பென்றாலும்
வாழும் போதே பிறர்க்கு
உதவா பிணமென மாறவும்
வேண்டாமே நீயே
பிழைக்கு இடங் கொடேல்
மனதில் ஓழுக்கந்தவறுகை
சொல்லில் தீயன சொல்ல
செயலிலும் ஈனச் செயல்
இவையாவும் பிழையென
தெரிந்திடல் வேண்டுமே
தீ என இதனை ஒதுக்குதல்
நானிலத்தில் நலமாகுமே
புதியன விரும்பு
எனக்கு இதுவே போதும்
என்பனவெல்லாம் சிற்சில
இடங்களிலே சிறப்பு தான்
எனினும் கல்வி கற்றலும்
நல்லன கேட்டலும் புதியன
விரும்பாதுஇருந்திருந்தால்
அரை ஆயுள் மனிதனாம் நீ
பூமி இழந்திடேல்
பூமி என்பதன் புகழென்ன
எனில் கானகம் மலையும்
கண்டதொரு ஆறும் என
எல்லாவகை இயற்கையே
ஆயின் அவற்றை அழித்து
திருத்த அதிகாரம் தந்தது
யார் உனக்கே
பெரிதினும் பெரிது கேள்
பெரிதினும் பெரிதாவதே
அது அவரவர் உள்ளத்து
அவா எனக் கொள் பணம்
பட்டம் பதவி புகழ் கல்வி
திரு என எதுவாயினும்
அதில் உயர்வை நாடுதல்
ஒர் வகையில் நலம் தானே
பேய்களுக்கு அஞ்சேல்
சாதி சமயம் இனம் மதம்
மொழியென எல்லாமும்
பேயெனும் கூற்றத்திற்கு
நேர் என்று உணர்ந்து நீ
அஞ்சாதிருத்தல் அவசியம்
அவற்றோடு கட்சியையும்
இணைத்துக் கொள்
பொய்மை இகழ்
பொய்மை எனப்படுவது
யாதெனில் நிலையாமை
செயற்கை போலி மாயை
என உருமாறிக்கொள்ளும்
அத்தனையுந்தானேயாம்
அவ்வாறாயின் அவற்றை
இகழ்தல் புகழுடை செயல்
போர்த் தொழில் பழகு
வீரனொருவன் பகைவரை
வெல்ல களம்காண செலல்
போரெனபடுவதாயின் நம்
நாட்டை காக்கும் நாட்டம்
உடையோன் மேற்கொள்
போர் முறை தந்திரங்கள்
யாவருக்கும் அவசியமே
மந்திரம் வலிமை
நம் எண்ணத்தில் உதிக்கும்
சொல்லோ செயலோ அது
திரும்பத்திரும்ப எண்ணி
இருத்தலே மந்திரமென்றே
உணர்ந்து எச்செயலிலும்
நாட்டம் மிகக் கொள்வது
மானுடர்க்கு அழகாகும் – bharathiyar puthiya aathichudi 8
மானம் போற்று
எந்த ஒரு காரியத்திலும்
ஈடுபடும் முன்னர் தனது
நிலையும் தகுதியும் இது
என எண்ணியிருத்தலே
மானம் எனப் படுமாயின்
தன்நிலை தாளாமையே
மானத்திற்கு மகுடமாகுமே
– மா கோமகன்
மிக அருமை வாழ்த்துகள்
பிணத்தினைப் போற்றேல், மந்திரம் வலிமை, இந்த புதிய ஆத்திசூடி
வரியின் விளக்கம் மனதை மாற்றி அமைக்கும் அருமையான வரிகள்…👌🙏🙏
உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்த வழி முறைகள்
சிறப்பு , வாழ்வியல் வழி முறைகளில் மானிடர்கள் ஏற்றிருக்க வேண்டிய வழிகாட்டுதல் கவித்துவத்தில் மிளிர்கின்றது. வாழ்த்துகள் கவிபெருமகனார் திரு கோமகன் அவர்களுக்கு .
புதியன விரும்பு :
கற்றலை மனதில் சுமந்த வண்ணமாய்
புதிய கற்றலை விரும்புதலும் சிறந்த ஞானத்தின் அறிவாற்றலே….!
கற்றலின் வரிகள் அருமை….