பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 9
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 9
மிடிமையில் அழிந்திடேல்
வறுமை என பன்னெடுங்
காலம் ஒருவனை வாட்டும்
என்பது அவனது குறையே
கடின உழைப்பின்மையும்
கண்டது எண்ணி உழன்று
இருத்தலாலும் அழிவென
ஐயமற உணர்வாய்
மீளுமாறு உணர்த்து கொள்
நமது சொல்லோ செயலோ
எது என்றாலும் அளவென
அதனை நிர்ணயித்தலும்
வேண்டுமென உணர்ந்தே
அதனை உறுதி செய்தால்
எதனிலும் மீளலாம் தானே
என உரக்க சொல்வேனே
முனையிலே முகத்து நில்
நீ ஆரம்பத்திலிருந்துதே
அதிரடி காட்டாது அளவென
நின்றிருந்தால் சென்றவழி
மீளுதல் யாருக்கும் எளிதே
என்றாலும் மீள முடியாதது
ஒன்றுண்டு இங்கு அதுவே
காலம் என்பதனை உணர்க
மூப்பினுக்கு இடங் கொடேல்
உன் எழுத்து சொல் செயல்
எண்ணம் என அனைத்தும்
இளமை என நீ எண்ணுதல்
சற்றுஉடற்பயிற்சி சரிசம
உணவு இளவயது நண்பர்
இருந்தாலே முதுமை
உனை அண்டாது காண்
மெல்ல தெரிந்து சொல்
உனக்குத் தெரிந்ததென
எல்லாம் உற்றார் உறவு
நண்பர்களுக்கு சொல்லும்
போது தெள்ளென தெரிந்த
பின் மெல்லவே சொல்லல்
சிறப்பாம் இது பகிரி
குழு பதிவிற்கும் என கொள்
மேழி போற்று
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
அவர் வாழ்வின் மேன்மைக்கு
மேழி எனும் ஏர்க்கலப்பையே
பிரதானம் எனவாக
உணவுண்ணும் ஒவ்வருமே
மேழி போற்றல்
நியாயம்தானே
மொய்ம்புற தவஞ்செய்
கடுந்தவஞ் செய்தல் ஏன்
என்றே சிந்தித்தால் நற்
பேறும் நலவாழ்வு பெற்றிட
என்று எண்ணுவாராயின்
அதனை வலிமையாய்
செய்தல் வேண்டுமென
வகுத்தனரே முன்னோர்
மோனம் போற்று
எப்பொருள் உன்வாய் வழி
சொல்லின் அப்பொருளால்
அடுத்தவர்களுக்கு நன்மை
பயப்பதில்லையாயின்
அப்பொருட் பேச்சிடினும்
மோனமெனும் அமைதியே
பெரிதென உணர்வோமே – bharathiyar puthiya aathichudi 9
மௌட்டியந் தனை கொல்
இல்லாமை இயலாமை
என எத்தனையோ ஆமை
உன்னிடத்தே இருந்தாலும்
அத்தனை ஆமைகளையும்
விட அறியாமையே தான்
மிகப் பெரும் பிணி என்றே
உணர்ந்தே அதை கொல்
யவனர் போல் முயற்சி செய்
யவனர் யாரென அறிவீரோ
தோற்கருவி வாசிப்போரும்
ஓவியரும் எனில் அதனை
கற்க பயிற்சி மிக தேவை
எனஉணர்ந்து அதனொத்த
முயற்சி அவசியம் தான்
அனைத்திலுமே
– மா கோமகன்
கோமகன் ஐயாவின் எளிமையான விளக்கம் என் அறிவை மேலும் அழகுப்படுத்துகிறது எளிமையான வார்த்தைகள் எண்ணத்தை எழில் படுத்துகிறது….தமிழ்த்தேனை சுவைத்தேன்… மகிழ்ச்சியான நன்றிகள் 🙏🙏
விளக்கம் அருமை வாழ்த்துகள்