கவிதை தொகுப்பு 50

நீரோடையின் 50 ஆவது கவிதை தொகுப்பு. தனி கவிதையாக அல்லது குறிப்பிட்ட ஆசிரியரின் கவிதைகளை மட்டும் பகிர்ந்து வந்த நீரோடை, வெல்வேறு ஆசிரியர்களின் கவிதைகளை தொகுப்பாக வெளியிடத்தொடங்கி 50 ஆவது பதிவை எட்டுகிறது – kavithai thoguppu 50

kavithai thoguppu 26

உங்கள் நீரோடை மகேஷ், கவி தேவிகா, நவீன், சிவராஜ் மற்றும் வேல் ஆகியோரின் கவிதைகள் தொகுப்பு இந்த பதிவில் இடம்பெற்றுள்ளது.

ஓய்வில்லா அலை

குழந்தையின்
கிறுக்கல்களுக்கு
சிக்கிக்கொண்ட
சித்திரகுப்தனின்
நாளேடு..

நாளேட்டின் மீதம்
காணவில்லை

பலவீனமான எறும்புகள்
பாறை சூட்டிற்கு
மடிவதாய்
சுவாசப்பாதை
முரண்பாடுகளுக்கு
சிதையும் எம் மானுடம்..

வழியறியாமல்
விழியோர
நீர்க்கோர்வைக்கு
நிகழ்காலத்தை
அடகுவைத்து..

திரைப்படத்தின்
இறுதி நிமிட
காட்சிகளை
வாழ்க்கைப் பாடமாக்கிய
இறைவா..
எம தர்மனுக்கு
உன் பதவியை
தாரைவார்த்தாயோ!

வீழும் எம் இனம்
மீளும் காலம் வேண்டும்..

கவித்தென்றல் நீரோடை மகேஷ்


வேல் விழியால்

உன் கண்களில்
மை தீட்டுகிறாயா
கூர்வாள் திட்டுகிறாயா…
உன் ஓரப்பார்வை
என் விழிவழி ஊடுருவி
இதயத்தையல்லவா தாக்குகிறது…

– கவி தேவிகா


அன்பின் நிதர்சனம்

ஒரு தாய் ஈன்றெடுத்த நாளின் முதல்
அறிமுகம் அன்பு !
இரவலாக பெற முடியாத ஒன்று
அன்பு !
மூச்சில் கலந்த வண்ணமாய்
இருப்பது அன்பு!

நாட்டில் கலந்து உரையாடுவது அன்பு !
ஐயத்தின் வெளிபாட்டை
போக்குவது அன்பு !
ஆசையில் மறைமுகமாக தெரிவது
அன்பு !
ஏழை வீட்டில் நிறைந்து இருப்பது அன்பு!
என்றும் நான் இருக்கிறேன் என்று
சொல்லுவது அன்பு !
ஒற்றுமையின் பேரானந்தம் அன்பு !
பக்தியின் அடையாளமாக திகழ்வது
அன்பு !

பாரபட்சம் பாராமல் பழகுவது அன்பு !
இறுதி வரை தொடர்ந்து வருவது அன்பு
மட்டுமே…!!!

– வேல்


பக்தி நெறி – பகுத்து அறி

ஓய்ந்து உள்ளம் ஒடிந்து உறுதுனையின்றி உதவிளார் எவருமிலர்…
என்றென்னி ஏங்குகையில்….

ஆத்திகமும் நாத்திகமும் பயன் தரா…..
அச்சூழ் நிலை நின்றே…

வெளிவர உதவ ஒரு கரம் வறின் அதுவே – கடவுள்….!
சித்தி கொண்டு போராடி வெற்றி பெறின் அதுவே பகுத்தறிவு…!

பக்தி கொண்ட ஆத்திகனும் பகுத்தறிவின்றி….முடமே…!
பகுத்தறிவானும் கொண்ட செயல் பக்தி இன்றி குறை குடமே…!

நாம் கொண்ட நம்பிக்கை நூலின் இருபுறமே..!
ஆத்திகமும் – நாத்திகமும்…!
ஒன்றிழுத்து மற்றொன்று விடுவதன்றி
சமநிலையே – வாழ்வின் மார்கம்….

ஊற்றும் நிறம் கொண்டு கிழவன் கீர்த்திக்கு ஊறு நேராது….
உடைக்கும் சிலை கொண்டு அண்ணல் சித்தாந்தம் மாறாது….
புனித நூல் பழிப்பதால் புகழ் உனக்கு சேராது…
இறையுணர்வை நிந்திப்பதால் பகுத்தறிவு வளராது….!

மாற்றான் நம்பிக்கையை மாற்றநினைக்கும் எவரேனும்….மா மட்டியே….!
அவர் பார் பக்தி பகுத்தறிவு என்றும் இனைந்திரா…..!

– சிவராஜ்


தனிமை

பகலும் தீர்ந்துவிட இரவும் வந்தது
இருளும் சூழ்ந்தது வானில் நிலவுமில்லை
விண்மீன்கள் காணவில்லை பனியோ கொட்டுகிறது
தனியொருவனாய் நான்மட்டும் நடக்கிறேன்
இந்த தனிமையும் இனிமை தான்
வெறுமை என்னை சூழ்ந்த போது
தனிமை தானாகவே என் தோழனாகிக் கொண்டது
பொறுமையாய் அதனுடன் பொழுதை போக்குகிறேன்
வானத்தை நிறைத்திருக்கும் மேகங்கள் போல
என் வாழ்க்கையையும் கனவுகள் நிறைத்திருக்கின்றன….
மேகங்கள் காட்டுகின்ற ஜாலங்கள் எல்லாம்
என் வாழ்விலும் பல மாயங்கள் கண்டேன்
பயணம் தொடங்கிய பின் பாதை தன் வழி நின்றது
காலங்கள் என்னை காயங்கள் செய்தது
கண் பார்த்து நிற்க கலி என்னை சூழ்ந்தது
விதி தன் வேள்வியில் என்னை பலியாக்க நினைத்தது
மதி கொண்டு எழுந்தேன் அது வழிவிட்டு நின்றது
பழி சுமக்க நான் பாவியில்லை
வலி தாங்க வேணுமென்று நியதியுமில்லை…
மதிப்பளித்தேன் பொறுத்திருந்தேன்
பண்புதனை வெளிப்படுத்தி
அன்பை மட்டும் வேண்டி நின்றேன்
ஆக்கினைகள் தாங்கவில்லை
ஆதரவைக் காணவில்லை – kavithai thoguppu 50
பொறுப்புமில்லை எந்தவொரு இருப்புமில்லை
அரிப்பினால் உடைந்த அணை போலானேன்
வெறுப்பும் வேதனையும் வெகுமானமாய் கிடைத்தன
சின்னத்தனங்களின் சிரிப்புக்கு மத்தியில் உத்தரித்தேன்….
விழித்துக்கொண்டேன் துணிந்து முடிவெடுத்து நின்றேன்
என் வழியை திருப்பிக் கொண்டேன்
தனித்து வந்த என்னை இன்று தனிமை
தன்னோடு இணைத்துக் கொண்டது…

– நவீன் ஈரோடு

You may also like...

2 Responses

  1. Kavi devika says:

    நீரோடை கவிப் பயணம் மேலும் தொடரட்டும்…வாழ்த்துகள்

  2. தி.வள்ளி says:

    கவிதை அனைத்தும் நீரோடையாய் மனதை சலசலக்க வைத்தது… இனிமையான இளந்தென்றல் ….அருமையான கவிச்சாரல்…கவிகளுக்கு வாழ்த்துக்கள்