நாலடியார் (24) கூடா நட்பு

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-24

naladiyar seiyul vilakkam

பொருட்பால் – நட்பியல்

24. கூடா நட்பு

செய்யுள் – 01

செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
இறைத்துநீர் ஏற்றும் கிடப்பர் – கறைக்குன்றம்
பொங்கருவி தாழும் புனல்வரை நாட
தங்கரும முற்றுந் துணை”
விளக்கம்: மேகங்கள் சூழப்பட்ட கரிய நிறத்தையும், அருவிப் புனலையும் உடைய மலை நாட்டு மன்னனே!
சுயநலவாதிகள் மழை விழும் போது கட்டுக் கோப்பற்ற பழைய வீட்டில் தண்ணீர் புகாதவாறு அணைபோட்டும், முன்னரே புகுந்த நீரை இறைத்தும், மேலிருந்து விழும் நீரை பாத்திரத்தில் ஏற்றும், தம் காரியம் ஆகும் வரை நம்மிடம் இருப்பர்: பின் பிரிவர். இப்படிப்பட்டவருடன் நட்பு கொள்ளக்கூடாது.


செய்யுள் – 02

“சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம் – மாரி
வறந்தக்காற் போலுமே வாலருவி நாட
சிறந்தக்காற் சீரிலார் நட்பு”
விளக்கம்: மிகவும் வெண்மையான அருவிகளை கொண்ட மலை நாட்டு வேந்தனே! உயர்ந்தோர் நட்பு மழை போலும் பயனுள்ளதாகும். நற்குணமில்லாதோர் நட்பு மழை இல்லாத வறண்ட காலத்தை ஒக்கும்.


செய்யுள் – 03

“நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை
வண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் – நுண்ணூல்
உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
புணர்தல் நிரயத்து ளென்று”
விளக்கம்: நுட்பமான அறிவினை உடையவர்களுடன் நட்பு செய்து அதன் பயனை அனுபவித்தல், விண்ணுலக இன்பத்தினைப் போல மேன்மையுடையதாகும். நுட்ப அறிவில்லா பயனிலாதவருடன் கொண்ட நட்பு நாகங்கள் ஒன்றினுள் சேர்ந்திருத்தல் போல துன்பம் தரும்.


செய்யுள் – 04

“பெருகு வதுபோலத் தோன்றிவைத் தீப்போல்
ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும் – அருகெல்லாம்
சந்தன நீள்சோலைச் சாரன் மலைநாட
பந்தமி லாளர் தொடர்பு”
விளக்கம்: பக்கங்கள் எல்லாம் சந்தன மர தோப்புகளை கொண்ட அரசனே! அன்பு இல்லாதோரிடம் கொண்ட நட்பு வளர்வது போல தோன்றி வைகோலில் பற்றிய தீயைப் போல ஒருக் கணப் பொழுதில் அழிந்து விடும்.


செய்யுள் – 05

“செய்யாத செய்துநாம் என்றலும் செய்வதனைச்
செய்யாது தாழ்ந்துக்கொண் டோட்டலும் – மெய்யாக
இன்புறூஉம் பெற்றி யிகழ்தார்க்கும் அந்நிலையே
துன்புறூம் பெற்றி தரும்”
விளக்கம்: செய்யமுடியாத காரியங்களையெல்லாம் செய்வோம் என உரைத்தலும், செய்ய முடிந்த காரியத்தை செய்யாமல் தள்ளி போடுதலும், உண்மையிலே இன்புறு பொருட்களை துறந்தார்க்கு அப்பொழுதே துன்பத்தை தரும்.


செய்யுள் – 06

“ஒருநீர்ப் மிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
விரிநீர்க் குவளையை ஆம்பலொக் கல்லா
பெருநீரார் கேண்மை கொளினுநீ ரல்லார்
கருமங்கள் வேறு படும்.
விளக்கம்: ஒரே குளத்தில் தோன்றி வளர்ந்த போதிலும், மணம் வீசும் தன்மை உடைய குவளை மலர்களுக்கு அல்லி மலர்கள் இணையாக மாட்டா. அதுபோல சிறந்த குணங்களை உடையோரின் நட்பை பெற்றிருந்தாலும் நற்குணமில்லாநோர் செயல் மாறாது.


செய்யுள் – 07

“முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு”
விளக்கம்: இளைய சிறிய பெண் குரங்கு, தன் எதிரே வந்த தந்தையாகி ஆண் குரங்கின் மீது பற்றி ஏறி அதன் கையில் இருக்கும் கனியை பறித்துக் கொள்வதற்கு இடமான மலைகள் உள்ள நாட்டின் அரசனே! மனம் பொருந்தாதவரிடம் கொள்ளும் நட்பு துன்பம் தருவதாகும்.


செய்யுள் – 08

“முட்டுற்ற போழ்தின் முடுகியென் னாருயிரை
நட்டா னொருவகை நீட்டேனேல் – நட்டான்
கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க
நெடுமொழி வையம் நக”
விளக்கம்: என் நட்பன் துற்புறும் போது விரைந்து சென்று எற் உயிரை அவன் கையில் கொடுத்து அவனது துன்பத்தை போக்காவிடில், இந்த உலகம் சிரிக்குமாறு, நண்பனின் மனைவியை கற்பழித்த பாவி செல்லும் நரகத்திற்குத்தான் செல்வேனாக.


செய்யுள் – 09

ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து
வேம்படு நெய்பெய் தனைத்தரோ – தேம்படு
நல்வரை நாட நயமுணர்வார் நண்பொரீஇப்
புல்லறிவி னாரொடு நட்பு”
விளக்கம்: தேன் கூடுகள் பொருந்திய மலை நாட்டு மன்னனே! நன்மை அறிவாரோடு கொண்ட நட்பை நீக்கி புல்லறிவினை உடையோரோடு கொண்ட நட்பு, பசுவின் நெய் ஊற்றி வைக்கும் பாத்திரத்தில் அதை நீக்கி, வேப்பெண்ணையை ஊற்றி வைத்தது போலாகும்.


செய்யுள் – 10

“உருவிற் கமைந்தான்கண் ஊராண்மை யின்மை
பருகற் கமைந்தபால் நீரளா யற்றே
தெரிவுனையார் தீயினத்தா ராகுதல் நாகம்
விரிபெடையோ டாடிவிட் டற்று”
விளக்கம்: அழகுடையவன் இடத்தில் உதவி செய்யும் குணம் இல்லாமை, பாலில் நீரைக் கலந்தது போலாகும். அறிவுடையோர் தீயோரைச் சார்ந்து கெடுதல், நாகப்பாம்பு விரியன் பெடையுடன் புணர்ந்து உயிரை விட்டது போலாகும்.

– கோமகன்

komagan rajkumar

You may also like...