தோள் கொடு தோழனே
கம்பீரமாக உன் தோள்களில்
அமரத்துடிக்கட்டும்.
வானில் ராஜ்ஜியம் அமைத்து
பறந்து திரியும் கருடன் கூட
உன் தோள்களில்
ஜோசியக் கிளியாக அமரத்
துடிக்கட்டும்.விலை மதிப்பில்லா
நட்பை,
தாய்மையை,
காதலை,
உன் அன்பால் வெல்ல
முடியும் என்ற நிலையில்.
உன் உழைப்பே விலையென்ற
உன் வெற்றிக்கு மட்டும்
தூரம் காட்டுவதேன் ?
உன்னில் அறியாமல் கிடக்கும்
கம்பீரம், பேராண்மை
இவைகளுக்கு அர்த்தம் கொடு.
உலகமே உன் தோள்களில்
அமரத்துடிக்கும்.
உலகமே விடிந்த பின்னும்
உள்ளம் விடியாத் தோழர்களை
உன் தோள் மீது அமர்த்தி
உலகை உற்று நோக்கச் செய்.
பயம் காட்டு,
போராடச் சொல்,
போர் தொடுக்கச் செய்.
அவர்களுக்கும் பேராண்மை – வெற்றி
யாவும் அவர்தம் தோள்களில் அமரும்.
சிந்தனைக்காக !