ஆரோக்கிய நீரோடை (பதிவு 2)
இந்த வாரம் லட்சுமி பாரதி அவர்கள் எழுதிய இரண்டு எளிய சத்தான உணவு முறைகளையும், பயனுள்ள குறிப்புகளையும் வாசிக்கலாம் – ஆரோக்கிய நீரோடை 2
வெந்தயப்பொடி கஞ்சி
புழுங்கலரிசி வடித்த கஞ்சி சூடாக உள்ளது – 200.மி.லி
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை
முளைகட்டிய வெந்தயப்பொடி – 1 சிட்டிகை
கறிவேப்பிலை பொடி – 1 தே.கரண்டி
வெல்லம் – 50.கிராம்
தண்ணீர் – 100.மிலி
செய்முறை
வெல்லத்தை ப்பொடித்து, கறிவேப்பிலை மற்றும் வெந்தயப்பொடியுடன் தண்ணீரிலிட்டு, சுடவைக்கவும். நன்கு கொதித்து வெல்ல வாசனை வந்ததும் இறக்கி சூடான வடிகஞ்சியில் ஊற்றி நன்கு கலக்கவும்.
வடிகட்டி, மிதமான சூட்டில் குடிக்க வேண்டும். வைட்டமின் எ, பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நிறைந்தது.
அவல்பொடி உருண்டை – ஆரோக்கிய நீரோடை
கட்டிசம்பா அவல் – 200 கிராம்
வெல்லம் – 75 கிராம்
உலர் முந்திரி – 6 எண்ணிக்கை.
செய்முறை
அவலில் உமி நீக்கி பட்டுப் போல பொடித்துக் கொள்ள வேண்டும். அதில் உலர் முந்திரியை சேர்க்க வேண்டும்.
வெல்லத்தை ப்பொடித்து 150.-மிலி.தண்ணீரில் சேர்ந்தது, வாசம் வரும் வரையில் சுட வைத்து வடிகட்டி அவல் கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி கிண்டி விடவும். சூடாக உள்ளபோதே உருண்டைகளாகப் பிடித்து, ஆறியதும் உண்ணலாம் – ஆரோக்கிய நீரோடை 2.
– லட்சுமி பாரதி, திருநெல்வேலி
இலங்கை தென் இந்திய உணவு தாவரங்களில் ஒன்று. இதன் இலையைக் கீரையாக முருங்கை பிஞ்சு அதன் காய் அதிலிருந்து பெறப்படும் பிசின் போன்றவற்றை தென்னிந்தியர்கள் காலம் காலமாகவே தங்களுடைய பாரம்பரியமாக உணவில் பல வகைகளில் பயன்படுத்தி வருகின்றனர். அதிலிருந்து பயனுள்ள இரண்டு உணவு குறிப்புகளை வரும் பதிவுகளில் வாசிக்கலாம்.
- முருங்கை பொடி சாதம்
- முருங்கைக்கீரை அடை
ஆரோக்கியம் தரும் சமையல் குறிப்புகள் …பகிர்தலுக்கு நன்றி சகோதரி