பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 10

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் பாரதியாரின் புதிய ஆத்திசூடி பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 10

bharathiyar puthiya aathichudi

யாரையும் மதித்து வாழ்

உனக்கு மதிப்பு தேவை
என்பது உன் விருப்பமென
எண்ணியிருந்தால் அடுத்த வரை
நீ மதித்து நடந்திடின்
அவரும் உன்னை மதித்திட
தானே திரும்ப கிடைப்பது
மதிப்பென உணர்

யௌவனம் காத்தல் செய்

இளமை அழகு களிப்பு
இவை மட்டும் யௌவனம்
என எண்ணாதே மகளிர்
கூட்டமென்ற அர்த்தமதை
உணர்ந்தே அவர்களையும்
காத்தலே அனைத்திலும்
அழகேயாம்

ரஸத்திலே தேர்ச்சி கொள்

ரசமென்பதற்கு பல்வேறு
அர்த்தமுண்டு எனினும்
செய்யுட்சுவை என்பதும்
ஒன்றேயாம் என்பதனாலே
இச்சுவை அறிய தேர்ச்சி
மிக தேவையென கற்பதே
அதன் ஆணிவேரென அறி

ராஜஸம் பயில்

சாத்வீகம் ராசசம் தாமசம்
என்ற மூன்று குணத்தில்
ராசசமென ஊக்கம் வீரம்
ஞானம் தானம் தருமமென
உணர்ந்தே ராசசம் பயிலல்
மானுடர் அனைவருக்குமே
அவசியந்தான் அன்றோ

ரீதி தவறேல்

ரீதி என்பது யாதெனில்
பாரம்பரியமான பழக்க
வழக்கந்தான் என்றேதான்
அறிந்தாலே புதுமை என்ற
பெயரில் பாரம்பரித்தை
இழக்காதே அன்றி பழமை
மாற்றலாமென உணர்

ருசிபல வென்றுணர்

ருசி என்ப நாவின் சுவை
மட்டுமன்றி விருப்பமென
கொள்ளலாம் பசித்தவன்
ருசியறியான் என்பதும்
உண்மை என்றாயினும்
விருப்பம் நிறைவேறிட
பசித்திருக்க பாதகமேது

ரூபம் செம்மை செய்

ரூபத்திற்கு பொருளுணர
அழகு வடிவம் மட்டுமன்றி
அடையாளமும் தானாம்
உன் அடையாளம் இது
என புறத்தோற்றதிலன்றி
அகத் தோற்றத்திலே என
உணர்த்துதல் அழகேயாம்

ரேகையில் கனி கொள்

உள்ளங்கை ஞானமதுவே
ரேகை என்ற கனிமமென
எளிதில் அறியா இயலாத
அந்த ஞானத்தில் அக்கறை
கொள்வதும் நன்கு அலசி
ஆராய்வதும் மானுடர்க்கு
அவசியமாகுமாம்

ரோதனம் தவிர்

துக்கத்தின் வெளிப்பாடு
அழுகை அது மானுடருக்கு
சிறப்பியல்பு என்றாயினும்
ஆடவர் அழக்கூடதென்பர்
அழுகை தவிர்த்தல் என்பது
ஆணோ பெண்ணோ என
இருபாலருக்கு பொதுவே

ரௌத்திரம் பழகு

சினமென்ப கோபமெனில்
பெருஞ்சினமே ரௌத்திரம்
என்பதாக அடாதுசெய்கை
அநீதி செயல் இவ்வாறென
கண்ணில் காட்சி காணின்
ரௌத்திரம் கொள்வதே
மானுடர்க்கு அழகாம்

– மா கோமகன்

You may also like...

1 Response

  1. Kavi devika says:

    அருமை வாழ்த்துகள்