பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 5

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் பாரதியாரின் புதிய ஆத்திசூடி பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 5

bharathiyar puthiya aathichudi

ஞமலி போல் வாழேல்

ஞமலி என்பது நன்றியின்
மறுவுரு நாய் என்றேதான்
அறிவீரோ என்றாயினும்
எவரையாவது இயைந்தே
வாழ்வதன் வாழ்க்கையாம்
என உணர்ந்து எவரையும்
சாராதிருத்தல் சிறப்பே

ஞாயிறு போற்று

ஞாயிறு போற்றுதல் நம்
தமிழர் வாழ்வது அடிப்படை
ஞாயிற்றின் ஒளியதுவே
உலகு வாழ் உயிர்களுக்கு
ஆதார சுருதி என அறிந்த
பின் ஞாயிறு போற்றுதல்
சிறப்புதானே

ஞிமறென இன்புறு

ஞிமிறு யாதெனின் தேனீ
என்றே தெளிவு கொள்க
இன்புற்றிருக்கும் தேனீக் கூட்டம்
கடும் உழைப்பின் உயர்வை
சொல்லுமாம் உழைப்பே
என்றும் உயர்வு தானென
உணர்வோமே

ஞெகிழ்வது அருளின்

ஏழைக்கு இரங்குதல் என்ப
உள்ளத்துள் உறைந்திடல்
வேண்டுமென உரைப்பேன்
அவ்வாறான இரக்கமும்
அருளொடு இணைந்தால்
ஆதரவற்றோர் வாழ்வில்
அன்பொளி தானாம்

ஞேயம் காத்தல் செய்

ஞேயம் என்பது சினேகத்து
சீரிய நிலையே சினேகம்
நிலையில் சற்றே பழக
நட்பு மலர்ந்து பின் உயிர்
கலந்த நட்பின் உயர்நிலை
ஞேயம் என்பதால் அதனை
காத்தல் அவசியம் தான் – bharathiyar puthiya aathichudi 5

தன்மை இழவேல்

சித்திரு னித்திரு
வி ழித்திருந்தால் மட்டுமே
பதவி கிட்டுமாம்
தனித் தன்மையுடன்
இருத்தலே தனித்திரு என்றாயின்
அதற்கு இகழ் வருதல்
ஏற்புடையதில்லையன்றோ

தாழ்ந்து நடவேல்

தன் நிலை தாழாமை
அந்நிலை தாழ்ந்தக்கால்
உயிர் வாழாமை மானம்
எனப்படும் என்பதனால்
தன் நிலை தாழ நடத்தல்
ஆன்றோர்க்கு அழகல்ல
வேண்டாவே தாழ்தல்

திருவினை வென்று வாழ்

திருவினை என்பன யாவும்
நல்வினை என்பதாயின்
அவ்வினை வெல்லுதல்
அனைவர்க்கும் ஏற்பே
என்பதோடு வெல்லுதலும்
எளிதாம் என்பதை ஏற்றே
வென்றே வாழ வேண்டுமே

தீயோர்க்கு அஞ்சேல்

தீயோர் நடத்தையதனால்
விளைவதுவே தீவினையே
தன் இறுதி தோல்வியே
என உணர்ந்தே அவரது
செயலுக்கு அஞ்சுதல்தான்
முறையுமன்று முடிவுமன்று
என்பதனை ஏற்போம் நாம்

துன்பம் மறந்திடு

நல்இன்பம் கடுதுன்பமும்
இணைந்தே இவ்வாழ்வாம்
இன்பமெனில் உள்ளத்தில்
களிப்பதும் துன்பமெனில்
மெய் துவண்டு விடுவதும்
இயல்பே எனினும்
துன்பம் மறத்தலே இன்பமாம்

– மா கோமகன்

You may also like...

1 Response

  1. R.Gomathi says:

    மிக அருமை வாழ்க வாளமுடன்