செல்ல மகளே
செல்ல மகளை தாலாட்டி தாய்மை கொண்ட தந்தையுள்ளம் வடித்த வரிகள்.
செல்ல மகளே !
காற்றாடி வாடகைக்கு வாங்கித் தள்ளிய
காற்று கூட என் மகள் முகம் பட்டதும் அவளைப் பார்த்து
“உனக்கே நான் சொந்தம் என்று” சொல்வது போல தோன்றிய கணம் !
அவள் அரும்பாய் என் மடியில், நானோ வங்கி அலுவலக இருக்கையில் !
தமிழ் நடையழகு கூட நாணம் கொள்ளும் மகளே நீ நடக்கும் அழகை கண்ட நொடி !
என்னவள் உன்னை சுமந்த கருவறை சொல்லும்
அவளை காட்டிலும் இன்பச் சுமை எனக்கே அதிகம் என்று.
என் தாய் தந்த பரிசு நான்,
எனக்கு பரிசாய் கிடைத்த தாய், என் மகள் நீயே !
உன்னை பிரிந்து சென்றால் அது
உயிர் வலி !
உயிர் போகும் வழி !
பெற்ற மகளை தாயாய் பாவித்து
தாலாட்ட மறுபிரகடனம் செய்யும்
தந்தையின் எண்ண அலைகள் அற்புதம்…
எல்லாவரிகளும் அருமை!
ஒவ்வொரு பெண் குழந்தை பிறந்த பின், ஒரு தந்தையும் பிறக்கிறார் என்பது உண்மை.
பகிர்விற்கு நன்றி நண்பரே!