தியாகத்தாய்

மரணப் படுக்கையில் நான் இருந்தாலும்
உன் ஒவ்வொரு நொடி நினைவுகளும்
என் அடுத்த நிமிட ஆயுளை சுமந்து வரும் தாயே.

உயிர் கொடுத்து உலகத்தில்
உலாவ விட்டவள் நீயே….

 

thiyaaga thaaiy

அன்று உன் கழுத்தை அலங்கரித்த
தங்கமகள் இன்று என் கல்லூரி
விண்ணபத்தைப் பூர்த்தி செய்து விட்டு
முகம் தெரியாத நபருக்கு அணிகலனாக
காத்திருக்கிறாள் அடகுக் கடையில்.

அம்மா என்ன செய்வேன் உனக்காக ….
உன் தியாகத்திற்காக….

என் ஜென்மங்களை அடகு வைக்கும்
கடவுளின் அடகுக் கடையை தேடி வருகிறேன்.
உன்னை தங்கத் தேரில் அமர்த்தி வளம் வந்து
என் கடனை தீர்க்க முயற்சி செய்வேன்.

தியாகத்தாய் : –

அம்மா உன் தியாகத்திற்கு என் ஜென்மங்களில் பதில் இல்லை …

 – நீரோடைமகேஷ்

You may also like...

4 Responses

 1. கவிதை அருமை பாராட்டுக்கள் !

  உண்மைவிரும்பி.
  மும்பை.

 2. Chitra says:

  மனதை தொட்ட கவிதைங்க… அருமை.

 3. Maheswaran.M says:

  மிக்க நன்றி

 4. மரணப் படுக்கையில் நான் இருந்தாலும்
  உன் ஒவ்வொரு நொடி நினைவுகளும்
  என் அடுத்த நிமிட ஆயுளை சுமந்து வரும் தாயே.
  நெஞ்சைத் தொட்ட அருமையான வரிகள்!…
  தாய்மையை உணர்வுபூர்வமாக ஆராதிக்கும்
  சொற்திறன் அமோகம்!!!..வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *