முருங்கை கீரை வடை
Drumstick Leaf Vadai
தேவையானவை
அரிசி மாவு – 2/3 கப்
கடலை மாவு – 1 கப்
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
நறுக்கிய முருங்கை இலைகள்
பொடியாக நறுக்கிய முட்டைகோசு – 4 ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – 1 ஸ்பூன்
எண்ணை – தேவையான அளவு
எலுமிச்சை – 1/2
செய்முறை:
நறுக்கிய முட்டை கோஸையும், முருங்கை இலைகளையும், சிறிது எண்ணை விட்ட பாத்திரத்தில் வதக்கவும். எண்ணை மற்றும் ஈரப்பதம் வற்றியவுடன் ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
பிறகு அரிசி மாவு மற்றும் கடலை மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கிய பின்னர், அதனுடன் உப்பு (தேவையான அளவு), மிளகாய் தூள், ஆற வைத்த முருங்கை மற்றும் முட்டை கோஸ் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலந்து சிறிது நேரம் காத்திருக்கவும். எலுமிச்சை பிழிந்து விட்டு மீண்டும் கலக்கவும்.
உருண்டை பிடித்து பருப்பு வடை வடிவம் போல தட்டி காய்ந்த எண்ணையில் போட்டு பொன்னிறத்தில் பொரித்தெடுத்து சூடாக பரிமாறவும். [முருங்கை வடை ரெடி] – drumstick leaf vadai / moringa leaf vadai
முருங்கை இலையின் நன்மைகள்:
1. இரத்தம் சுத்தாமாகும்,
2. இரத்த அழுத்தம் சீராகும்,
3. இளநரையை போக்கும்,
4. உடல் பலமாகும்,
5. கண் பார்வை சீராகும்,
6. எலும்புகள் வலுப்பெறும்
மேலும் பல…