என் மின்மினி (கதை பாகம் – 46)
சென்ற வாரம் – நீ எங்க போனா எனக்கு என்ன? எதோ எனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு நிக்குறீயோணு கேட்டா ஓவரா பேசறே – en minmini thodar kadhai-46
சரியாக ஒரு அரைமணி நேரம் சென்றிக்கும்.,தன் தோழிகளுடன் கடைவீதிக்கு சென்ற ஏஞ்சலின் தனியாக திரும்பி வந்துகொண்டிருந்தாள்… இன்னமும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லாமல் அதே இடத்தில் காத்துக்கொண்டிருந்தான் பிரஜின்…
அவனருகில் வந்தவள் என்னடா இன்னும் இங்கே நின்னுட்டு இருக்கே.என்ன ஆச்சு?யாருக்கு வெயிட் பண்றே,வீட்டுக்கு போயி சீக்கிரமா சாப்பிடு என்று அவனுக்கு உத்தரவிட்டாள்… நீ வெளியே வருவீயானு கூட தெரியாம உனக்காகதாண்டி வெயிட் பண்ணிட்டு இருந்தே.ஆனாலும் நீ வந்தே.கூட உன் தோழிகள் வந்தாங்க.என்னால எதுக்கு பிரச்சனைனு தான் அமைதியா நின்னுட்டேன்,நான் எவ்வளவு தான் கோபப்பட்டு பேசுனாலும் என் காலையே சுத்தி சுத்தி வறீயே.உன்ன விட்டுட்டு வேற யாருக்காக வெயிட் பண்ண போறே சொல்லு என்றான் பிரஜின்…
என்னடா இப்படியெல்லா பேசறே.நீ இப்படியெல்லா பேசி நான் கேட்டதே இல்ல.என்னை உனக்கு புடிக்கும்னு தெரியும். ஆனால் இந்த அளவுக்கு புடிக்கும்னு தெரியாது.என்ன மன்னிசுறுடா என்று கண்கலங்கினாள் ஏஞ்சலின்…
ஹே இதுக்கெல்லாம் அழுவாங்களா.முதலில் அழுவதை நிறுத்து என்று சொல்லியவாறே நாளைக்கு எனக்கு பிறந்தநாள் என்றான் பிரஜின்…
என்னடா இப்போ சொல்லுறே. முன்னாடியே சொல்லியிருந்தால் கிஃப்ட் எதாவது வாங்கியிருப்பேனே,போடா என்று அவனை கடிந்துகொண்டே பிறந்தநாள் வாழ்த்துக்களை சொன்னாள் ஏஞ்சலின்… முன்னாடியே சொன்னால் இந்தமாதிரி எதாவது பண்ணுவே தெரிஞ்சுதான் இப்போ சொல்லுறே என்று கூறி சிரித்தான் அவன்… ரொம்ப சிரிக்காதே,நீ சொல்லவில்லைனா எனக்கு தெரியாதா உன் பிறந்தநாள் எப்போதுனு..,இந்தா இதை நாளைக்கு
போட்டுட்டு வா என்று சொல்லி அவளிடம் மறைத்து வைத்திருந்த காகித பொட்டலத்தை பிரித்து ஒரு சட்டையினை எடுத்து அவனிடம் நீட்டினாள் ஏஞ்சலின்…
ஆச்சர்யத்துடன் ஹே வாவ் வெரி நைஸ்,எனக்கு புடிச்ச ரெட் கலர்,ரொம்ப நன்றி.., எப்படி உனக்கு தெரியும்,ப்ளீஸ் சொல்லு என்று அவள் கண்களை பார்த்து சிரித்தவாறே அவன் கேட்க அவன் கண்களில் பொங்கி பெருகும் மகிழ்ச்சியை பார்த்தவாறே கேள்விக்கு கூட செவி சாய்க்காமல் அவன் நினைவுகளில் மூழ்கி மகிழ்ச்சியில் திளைத்து நின்றாள் ஏஞ்சலின்… – en minmini thodar kadhai-46
– அ.மு.பெருமாள்
பாகம் 47-ல் தொடரும்